ஸ்ருதியை சந்தித்து மீனா அழ முத்துவுக்கு ரவி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதி டப்பிங் பேசி முடிக்க மீனா அவரை பார்க்க வந்திருப்பதாக சவுண்ட் இன்ஜினியர் கூறுகிறார்.
பிறகு வெளியே வந்த ஸ்ருதியிடம் மீனா கண்ணீருடன் நீங்க ஏன் வீட்டுக்கு வர மாட்டுறீங்க என்று கேட்க ஏன் மீனா உங்களுக்கு தெரியாதா என்று திருப்பி கேட்கிறார். உங்க ஹஸ்பண்ட் என் அப்பாவை அடிக்காம இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினையே இல்ல என்று சொல்கிறார். அவர் அடிச்சது தப்பு தான் அதனால் நியாயப்படுத்த விரும்பல. ஆனா உங்க அப்பா என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தி பேசினார் தெரியுமா என்று கேட்க அவர் நீங்க செயினை எடுத்தது பார்த்துட்டு தப்பா புரிஞ்சு இருப்பாரு அத நீங்க எடுத்து சொல்லி புரிய வைத்து இருக்கணும் என்று சொல்ல மீனா அங்கு நடந்த விஷயங்களை சொல்கிறார்.
உங்க அப்பா கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேட்கிறேன் என்று சொன்ன உங்க ஹஸ்பண்ட் பண்ண தப்பு நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கணும் என்று சொல்லி கேட்க என்னால தான் அவர் அடிச்சாரு அதனால நானே மன்னிப்பு கேட்கிறேன். நீங்க அந்த வீட்டுக்கு வரணும் சொல்லி அதுதான் உங்க வீடு யோசித்து நல்ல முடிவா எடுங்க நான் கிளம்புறேன் என்று கிளம்பி வருகிறார்.
மறுபக்கம் முத்து ரவியை சந்தித்து டேய் ஏன்டா வீட்டுக்கு வர மாட்ற மாமியார் வீட்டுக்கு போனமா வந்தோமானு இல்லாமல் அங்கேயே தங்கிட்டியா என்று கேட்கிறார். அங்க அப்பா நீ இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாரு கொரியர் வந்தது ரவி ரவின்னு கூப்பிட்டு இருக்காரு. நீ என்னடா மாமியார் வீட்ல சுகுசா இருக்க என்று சொல்ல நாங்க இல்லவே இல்ல நைட்டு எல்லாம் இங்க தான் தங்குனேன் என்று விஷயத்தை சொல்ல உனக்கு அவ்வளவு பெரிய வீடு இருக்கு தனியா அருளும் இருக்கு அப்படி இருக்கும்போது நீ எதுக்குடா இங்க தங்கனும் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வீட்டுக்கு வா என்று சொல்கிறார். ஸ்ருதி வராம நான் வரமாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
அடுத்ததாக தன்னுடைய வீட்டுக்கு வந்த மீனா அம்மாவிடம் நடந்த விஷயங்களை சொல்ல சத்தியா உன் வீட்டுக்காரர் என்ன பெரிய ரவுடியா எல்லாரையும் போட்டு அடிக்கிறாரு அவர் பண்ணது தப்பு தானே அவர் போய் மன்னிப்பு கேட்டா தான் சுருதி உங்க வீட்டுக்கு வருவாங்க, போய் மன்னிப்பு கேட்க சொல்லு என்று சொல்லி முத்துவை பற்றி தரக்குறைவாக பேசுகிறார்.
மீனாவின் அம்மாவும் சீதாவும் மாமா பண்ணது சரிதான் என்று பேசுகின்றனர். சத்தியா பணம் இருந்திருந்தால் இப்படி பேசி இருப்பாங்களா பணக்காரங்க கண்ணாடி வளையல் போட்டா கூட அதோட விலை என்னன்னு பேசுவாங்க ஆனா ஏழைங்க வைர வளையல் போட்டா கூட அதை கண்ணாடி வளையல் மாதிரி தன் பார்ப்பாங்க. பறக்கும்போது ஏழையா பறக்குனது தப்பு கிடையாது ஆனா அப்படியே வாழ்ந்துட்டு போகக்கூடாது பணக்காரங்களா வாழ்ந்து காட்டணும் கூடிய சீக்கிரம் நான் நல்லா சம்பாதிச்சு இந்த குடும்பத்தை மாத்துறேன் என்று பேசும் சத்தியா இது அப்பா மேல சத்தியம் என்று சொல்லி வெளியே கிளம்ப சத்யாவுடன் நடவடிக்கை சரி இல்லை என மீனா கவலைப்படுகிறார்.
அடுத்ததாக டப்பிங் பேசி முடித்த ஸ்ருதி பசிக்குது என்று ரவியின் ரெஸ்டாரண்டுக்கு போன் போட்டு சிக்கன் ப்ரைட் ரைஸ், லாலிபாப் சிக்கன் என சிலவற்றையை ஆர்டர் செய்கிறார். ரவியின் நண்பர் ஸ்ருதி ஆடர் வைத்திருப்பதை சொல்ல அரபி என்ன பத்தி ஏதாவது கேட்டாளா என்று விசாரிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.