மீனாவுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்துள்ளார் முத்து.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து தன்னுடைய அப்பா அண்ணாமலைக்கு போன் போட்டு எப்படி இருக்க பா? போரடிக்குதா ஊருக்கு வந்துடவா என கேட்க இரண்டு நாள் இருந்துட்டு வா என்று சொல்கிறார். வேலைக்கு போகணும் பா என முத்து சொல்ல அதெல்லாம் செல்வம் பார்த்துப்பான், சரி நான் உனக்கு கொஞ்சம் ஃபோட்டோக்களை அனுப்பி வைத்திருந்தேனே அதை பார்த்தியா என கேட்க முத்து என்ன போட்டோப்பா நான் இன்னும் பார்க்கல என்று சொல்ல நான் லைன்லயே இருக்கேன் நீயே பார்த்துட்டு சொல்லு என்று சொல்கிறார்.
விஜயா மேக்கப்பில் இருக்கும் போட்டோவை பார்த்த முத்து யாருப்பா இது? யாராச்சும் நடிகையா என கேட்க இல்ல பியூட்டி பார்லர் போயிருந்தோம் என அண்ணாமலை சொல்ல ஓ அங்க ஒரு லேடியை கரெக்ட் பண்ணிட்டியா சூப்பர்பா நீ சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும் சின்னம்மா நல்லா தான் இருக்காங்க என்று முத்து சொல்ல அது சின்னம்மா இல்ல உங்க அம்மா தான் நல்லா பாரு என அண்ணாமலை சொல்ல முத்து அதை பார்த்து ஷாக் ஆக்கினார்.
அதன் பிறகு முத்து சரினா இந்த போட்டோவை பாட்டி கிட்ட காட்டிட்டு உங்களுக்கு போன் பண்றேன் என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு போட்டோவை எடுத்துச் சென்று பாட்டி கிட்ட காட்டி இது யாருன்னு தெரியுதா? பாட்டி எல்லாம் உங்களுக்கு வேண்டியவங்க தான் என்று சொல்ல யாரோ நடிகை மாதிரி இருக்கு, நானே சினிமா பார்த்து பல வருஷம் ஆச்சு யாருன்னு தெரியல என சொல்கிறார்.
அன்னம்மா அக்கா எனக்கு நேர்ல பார்த்தாலே அடையாளம் தெரியாது இதுல போட்டோ காட்டுற ஒரே மங்கலா இருக்கு என்று சொல்லி விடுகிறார். அதன் பிறகு மீனாவிடம் காட்ட எங்கேயோ பார்த்த முகம் மாதிரி தான் இருக்கு, அத்தை மாதிரியே ஜாடை இருக்கு என சொல்லி அதன் பிறகு அட அத்தை தான் என்று உறுதியாக சொல்ல முத்து கரெக்டா கண்டுபிடிச்சிட்ட என பாராட்டுகிறார்.
அதன் பிறகு பாட்டி விஜயாவுக்கு பைத்தியம் ஏதாவது புடிச்சிருக்கா என்ன இதெல்லாம் என்று கேட்க அதான் மனோஜ்க்கு பார்த்திருக்க பொண்ணு பியூட்டி பார்லர் ஓபன் பண்ணி இருக்கு, அம்மா பேரு தான் கடைக்கு வச்சிருக்காம். அவங்க தான் அம்மாவுக்கு இப்படி மேக்கப் போட்டு விட்டு இருக்காங்க என்று சொல்ல பாட்டி ஐஸ் ரொம்ப ஓவரா இருக்கு அந்த பொண்ணு நல்லவளா என்று கேட்க நல்ல பொண்ணுனு தான் அப்பா சொல்றாரு என்று சொல்கிறார்.
பார்க்க நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்கு ஆனா கொஞ்சம் திமிரா இருக்கு என்ன ஒரு நாள் பார்த்ததும் வேலைக்காரி என்று நினைத்து சத்தம் போட்டாங்க என்று மீனா சொல்ல இது தப்பா இருக்கு என்று பாட்டி யோசிக்கிறார்.
பணக்கார குடும்பத்தை சேர்ந்த பொண்ணு, மலேசியாவில் நிறைய ஓட்டல் இருக்காம் என மீனா சொல்ல அதுதான் விஜயா புடிச்சிட்டு இருக்கா, அவளுக்கு பணம் தான் முக்கியம் குணம் எல்லாம் அப்புறம் தான் என சொல்கிறார்.
இந்த மேக்கப் எல்லாம் போடலனு யாரடிச்சாங்க என்று கேட்க முத்து மேக்கப் போடாமலேயே நிறைய பேர் அழகா இருக்காங்க ஏன் நம்ம மீனா பவுடர் கூட அடிக்க மாட்டா ஆனா அவ எவ்வளவு அழகா இருக்கா என்று சொல்ல மீனா வெட்கப்படுகிறார்.
அதுமட்டுமல்லாமல் என்ன தான் இருந்தாலும் மீனா மாதிரி திறமைசாலியா இருக்க முடியாது, மீனா கண்ணை மூடிக்கிட்டு பூ கட்டுறா அவங்களால கண்ணை மூடிக்கிட்டு மேக்கப் போட முடியுமா என்று மீனாவை பெருமையாக பேசுகிறார்.
இன்னொரு பக்கம் மனோஜ் புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில் யார் என்னவென்று தெரியாமல் கோபப்பட்டு பேசி தனது வேலையை இழக்கிறார். அங்கே இருக்கும் ஒருவர் உனக்கு உன் வாய் தான் பிரச்சனை என சொல்லி வேற வேலையை பார்க்க சொல்லி அனுப்புகிறார்.
அதன் பிறகு அண்ணாமலை தூங்கிக் கொண்டிருக்க திடீரென தூக்கத்திலிருந்து அலறி எழுந்து திருடன் திருடன் என கத்த விஜயா லைட்டு போட நீ என்ன தூங்காம உக்காந்துட்டு இருக்க என கேட்கிறார்.
அஞ்சாயிரம் ரூபாய் கொடுத்து மேக்கப் போட்டு இருக்கேன்.. ரோகிணி என்னை அழகா ரெடி பண்ணி இருக்கா, படுத்து தூங்கினா எல்லாம் கலைந்திடும், அதனாலதான் படுக்க மனசு இல்லாம உக்காந்துட்டு இருக்கேன் என சொல்கிறார்.
அதற்கு அடுத்ததாக மனோஜ் கல்யாணத்துக்கு யாரை எல்லாம் கூப்பிடலாம் என்று கேட்க ரொம்ப வேண்டப்பட்டவர்களை மட்டும் கூப்பிடலாம் என்று அண்ணாமலை சொல்கிறார். மேலும் நாளைக்கு நான் ஊருக்கு போகலாம்னு இருக்கேன் நீ என்கூட வா அம்மாவ கல்யாணத்துக்கு கூப்பிட்டு வரணும் என்று சொல்ல நான் அந்த ஊருக்கு வர மாட்டேன் உங்க அம்மாவுக்கு என்னால எல்லாம் வந்து சேவை செய்ய முடியாது, நீங்களே போய் கூப்பிட்டுட்டு வாங்க என்று விஜயா கோபப்படுகிறார்.
இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.