முத்துவுடன் பார்ட்டிக்கு போன மீனாவுக்கு நண்பர்களால் அதிர்ச்சி காத்திருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி வர சொன்னதால் மனோஜ் ரெஸ்டாரன்ட் ஒன்றில் காத்துக் கொண்டிருக்க லேட்டாக வரும் ரோகிணி சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு ரொம்ப நேரம் வெயிட் பண்றீங்களா என்ன கேட்க மனோ ஆமா ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்கேன் என சொல்கிறார்.

ரோகிணி என்னங்க ஒரு பேச்சுக்காவது இல்லை இப்பதான் வந்தேன்னு சொல்லலாம்ல என சொல்ல இல்ல உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்காது அதனாலதான் உண்மைய சொன்னேன் என கூறுகிறார். பிறகு ரோகிணி நாளைக்கு நீங்க ஃப்ரீயா என கேட்க வேலையில்லாம இருக்கிறவன் எப்பயும் ப்ரியா தான் இருப்பேன் சொல்லுங்க என மனோஜ் கேட்கிறார்.

உடனே ரோகிணி நாளைக்கு உங்களுக்கு நான் வேலை தரேன் சம்பளம் எல்லாம் கிடையாது நீங்க நடிக்கணும் என சொல்ல மனோஜ் என்னவா நடிக்கணும் என கேட்க எனக்கு ஹஸ்பண்டா நடிக்கணும் என சொல்கிறார். ஏற்கனவே அந்த பிஏகிட்ட நீங்க தான் என் ஹஸ்பண்ட் என்று சொல்லிட்டீங்க அவன் மேடம் கிட்ட சொல்லவே அவங்க ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி ஹஸ்பண்டோட வரணும்னு சொல்லிட்டாங்க, இப்போ ஹஸ்பண்ட் இல்லன்னு சொன்னா அந்த பிஏ திரும்பவும் பிரச்சனை பண்ணுவான் அதனால நீங்க வாங்க என சொல்லி கூப்பிடுகிறார்.

அடுத்ததாக முத்து மீனாவை கூட்டிக்கொண்டு பார்ட்டிக்கு வர நண்பர்கள் நல்ல விதமாக வரவேற்று கேக் வெட்ண வைத்து இருவரையும் மாற்றி மாற்றி ஊட்டிக் கொள்ள சொல்கின்றனர். அதன் பிறகு டிரஸ் எடுத்து கொடுக்கின்றனர்.

பிறகு முத்துவின் நண்பர்கள் ஒவ்வொருவராக ரூமுக்கு சென்று சரக்கு அடித்து விட்டு வெளியே வருகின்றனர். முத்துவும் ரூமுக்கு சென்று சரக்கு அடித்து விட்டு வெளியே வந்து நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஜாலியாக பிரியாணி சாப்பிட மீனா கடுப்பாகி நிற்கிறார். முத்து வீட்டுக்கு போகலாம் வாங்க என கூப்பிட அவர் கூட்டிட்டு வந்தவனுக்கு கூட்டிட்டு போக தெரியாதா அப்படி ஓரமா நில்லு என சத்தம் போடுகிறார்.

இந்த நேரம் ஹவுஸ் ஓனர் வந்து சத்தம் போட அவர் மீனாவை பார்த்துவிட்டு குடிகாரங்களுக்கு மத்தியில ஒரு பொண்ணு வேற நின்னுகிட்டு இருக்கு என அசிங்கமாக பேசிவிட்டு கீழே செல்ல மீனா கோபப்பட்டு வீட்டுக்கு கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.