காலில் கட்டுடன் வீட்டுக்கு வந்துள்ளார் மனோஜ்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து ஹாஸ்பிடலில் ரோகினியிடம் சண்டை போட்டு அவரை கியூவில் நிற்க வைத்தார்.

அதன் பிறகு விஜயா மற்றும் பார்வதி மனோஜை வீட்டுக்கு அழைத்து வர விஜயா மீனா விடம் அவன் பெரிய கண்டத்திலிருந்து தப்பிச்சு வந்திருக்கான் ஆரத்தி கரச்சி எடுத்துட்டு வா என சொல்ல மீனா அதை செய்யாமல் ரூமுக்குள் சென்று விடுகிறார். பிறகு விஜயா மீனாவை திட்டி கொண்டு அவரே ஆரத்தி கரைத்து மனோஜ்க்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து வருகிறார்.

அதன் பிறகு மனோஜ் தன்னுடைய நண்பர்களை பார்க்க வர அவர்கள் நாளைக்கு மீனாவை கூட்டிகிட்டு வீட்டுக்கு வா உனக்கு ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கிறோம் என சொல்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை சாப்பிட உட்கார மீனா பரிமாற எல்லாவற்றையும் எடுத்து வந்து வைக்க அப்போது விஜயா மனோஜையும் கூட்டி வந்து உட்கார வைக்கிறார். மீனா மனோஜ் விட்டுவிட்டு மற்ற இருவருக்கும் சாப்பாடு பரிமாற விஜயா கோபப்படுகிறார்.

அவருக்காக எதுவும் செய்ய முடியாது என மீனா அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு விஜயாவை மனோஜ்க்கு சாப்பாடு பரிமாறுகிறார். அப்போது வரும் முத்து எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்க விஜய்யா ஸ்வீட்டை எடுத்துக் கொள்ள யோசிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.