ரோகிணியை கடைக்காரர் சிக்க வைக்க விஜயா மிளகாய் அரைத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை நம்பி பெட்டு கட்டி ஏமாந்த மீனா அந்த விஷயத்தை பூ கட்டுபவர்களிடம் சொன்னதும் அவர்கள் மீனாவை கலாய்த்து சிரிக்க அப்போதும் முத்துவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். திரும்பவும் இன்னொரு முறை சான்ஸ் தரோம் முத்துவுக்கு போன் போட்டு எப்படி இருந்ததுன்னு கேளு என்று சொல்கின்றனர்.
மீனாவும் ஆசையாக போன் போட்டு கேட்க முத்து நானே அவசர அவசரமா சவாரி பிக்கப் பண்ண போயிட்டு இருக்கேன் போனை வை மீனா என்று திட்டி விடுகிறார். இதனால் மீனாவை திரும்பவும் கலாய்க்க மீனா பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறார்.
அடுத்ததாக ரோகினி ஒரு துணி கடைக்கு டிரஸ் எடுக்க வருகிறார். மறுபக்கம் விஜயா பார்வதியிடம் அந்த வீட்டில் எனக்கு மரியாதையே இல்ல என்று புலம்ப பரதநாட்டியம் கிளாஸ் சூடுபிடிக்க ஒரு மாசம் ஃப்ரீ என்று சொல்லி ஆட்களை சேர்க்கலாம் என்று ஐடியா கொடுக்க ஓசியில் சொல்லித்தர சொல்றியா என்று விஜயா கடுப்பாகிறார்.
பார்வதி கிளாஸ் மட்டும்தான் ஃப்ரீ யூனிபார்ம் காசு கொடுத்து தான் வாங்கணும்னு சொல்லி கம்மி விலையில் வாங்கி அதிக விலைக்கு வித்திடலாம் என்று ஐடியா சொன்ன விஜயா நல்ல ஐடியா என்ன கடைக்கு கிளம்பி வருகிறார்.
கடையில் ரோகினி கிருஷ்க்கு ஒரு துணியை எடுத்து விட்டு கீழே இறங்கி வரும்போது விஜயா அவரை பார்த்துவிட்டு ரோகிணி நீ என்ன இங்கே என்று கேட்டுக் கொண்டிருக்க சேல்ஸ்மேன் நீங்க கேட்ட துணியை பேக் பண்ணியாச்சு உங்க பையனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி கோர்த்து விடுகிறார். விஜயா பையனா? என்ன பேசுறீங்க என்று சேல்ஸ் மேனிடம் சண்டைக்கு போக ரோகிணி சமாளிக்கிறார்.
என்னோட கிளையன்ட் பையனுக்கு டிரஸ் எடுக்க வந்தேன் அதுதான் மாத்தி சொல்லிட்டாரு என்று சொல்லி விஜயாவை சமாளிக்க உங்க பில்லையும் நானே கட்டுகிறேன் என்று சொல்கிறார். விஜயா உடனே ஓகே சொல்ல ரோகிணிக்கு ஆறாயிரத்துக்கும் அதிகமாக செலவு வைக்கிறார்.
அடுத்ததாக முத்து காஞ்சிபுரம் பட்டு புடவையுடன் வீட்டுக்கு வர மீனா புடவையை வாங்கி ஒன்றும் சொல்லாமல் வைத்துவிட்டு செல்ல என்ன ஆசையா வாங்கிட்டு வந்தா எதுவுமே சொல்லல என்று முத்து கேள்வி கேட்க மீனா பெசலேட் தோசை செஞ்சு கொடுத்தேன். நீங்க ஏதாவது சொன்னீங்களா உங்களால எனக்கு ரூ.50 நஷ்டம் தான் என்று பெட்டு கட்டிய விஷயத்தை சொல்ல முத்து நீ சுடுதண்ணி வச்சா கூட சூப்பரா தான் இருக்கும். அத தினமும் சொல்லிக்கிட்டேவா இருக்க முடியும் என்று ஐஸ் வைக்க மீனா கரைந்து போகிறார். பிறகு முத்து புடவையை கொடுத்து சாரி சொல்ல அதை வாங்கிக் கொண்டு ரூமுக்குள் சென்று விடுகிறார். முத்து மீனா நீ வெளியே வர போறியா இல்ல நான் வெளிய போயிடட்டுமா என்று கேட்டுக் கொண்டே இருக்க அமைதியாக இருக்கும் மீனா ஒரு கட்டத்தில் புடவை கட்டிக் கொண்டு வந்து சர்ப்ரைஸ் செய்கிறார். பிறகு இருவரும் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர். மீனா முத்துவின் புடவை மடிப்பை சரி செய்து அவரை கூல் செய்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.