விஜயாவுக்கு அண்ணாமலை அதிர்ச்சி கொடுக்க முத்து மீனா இடையே ரொமான்ஸ் தொடங்கியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ்க்கு கல்யாணம் பண்ண மண்டபம் பாக்கணும் நிறைய செலவு இருக்கு என்று சொல்ல அதெல்லாம் தேவையில்லை, கோவில்ல பண்ணலாம் என்று சொல்கிறார் அண்ணாமலை.
ரவியும் அதுதான் சரி என சொல்ல விஜயா முத்துக்கு மட்டும் அவ்வளவு செலவு பண்ணீங்களே என்று கேட்க அது இவனுக்கு செலவு பண்ணது இவன் தான் ஓடி போய்ட்டான் என சொல்ல விஜயா பதில் பேச முடியாமல் அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்து விஜயாவை கூப்பிட்டு உட்கார வைத்து இப்ப போய் எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்து என்னன்னு சொல்லி கூப்பிடுவ? என் முதல் பையனுக்கு கல்யாணம்னு சொல்லுவியா? ஏற்கனவே அப்படித்தானே போய் எல்லாரையும் கூப்பிட்டோம் என சொல்கிறார். அதனால் கோவிலில் கல்யாணம் முடிச்சுட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல ரெஜிஸ்டர் பண்ணிடலாம் என சொல்கிறார்.
பொண்ணு வீட்டுக்காரங்க என்ன நினைப்பாங்க என விஜயா கேட்க பொண்ணு வீட்டுக்காரங்கன்னு யாரு இருக்காங்க அந்த பொண்ணு மட்டும் தனியா வந்து பேசிட்டு போது என சொல்ல அதெல்லாம் மலேசியாவில் ஆளுங்க இருக்காங்க பெரிய பணக்கார குடும்பம் என விஜயா பீத்தி கொள்கிறார்.
இதைத்தொடர்ந்து இந்த பக்கம் மீனாவும் முத்துவும் ஊருக்குள் வந்து இறங்க பாட்டி பஸ் ஸ்டாண்ட் வந்து காத்திருக்க முத்து பாட்டியை பார்த்தது குஷியாக பாட்டி மீனாவை வரவேற்று முத்தம் கொடுக்க முத்து எனக்கு இல்லையா என கேட்டு முத்தம் வாங்குகிறார்.
பிறகு வீட்டுக்கு நடந்து வரும் வழியில் ஒருவர் முத்துவை பார்த்து என்ன முத்து எப்படி இருக்க என கேட்க நல்லா இருக்கேனு முத்து சொல்ல கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னாங்க அப்புறம் எப்படி நல்லா இருக்க என அந்த நபர் கேட்க பாட்டி அடேய் குடிகார பயலே நீ வீட்டுக்கு போ உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி உன்னை தொடப்பதாலே அடிக்க சொல்றேன் என்று விரட்டி விடுகிறார்.
பிறகு டிராக்டரை பார்த்ததும் மீனா எனக்கு இதுல போகணும் என சொல்ல அதுல தான் போகப் போறோம் என பாட்டி சொல்ல பிறகு முத்து டிராக்டரை ஓட்ட மீனாவை கையைப் பிடித்து மேலே ஏற்றி உட்கார வைக்கிறார். அதேபோல் மீனா ஹாரன் அடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அடிக்கிறார். முத்துவுக்கு மீனாவுக்கும் இடையே அப்படியே லைட்டாக ரொமான்ஸ் ஸ்டார்ட் ஆகிறது.
பிறகு வீட்டுக்கு வந்ததும் எல்லோரும் முத்துவையும் மீனாவையும் பார்த்து ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு என பாராட்டுகின்றனர். அடுத்து ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்துச் செல்ல கொஞ்ச நேரத்தில் முத்துவின் நண்பர்கள் வந்து பார்ட்டி இருக்கு என சொல்லி அழைக்க முத்து மீனாவை கூப்பிட மீனா இன்னொரு பார்ட்டியா? நான் வரவே மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.
முத்து மீனாவிடம் கெஞ்ச மீனா முடியவே முடியாது என உறுதியாக சொல்லி விடுகிறார். பிறகு மீனா வெளியே வந்து இங்கேயே பார்ட்டி பண்ணலாம், எல்லாருக்கும் சமைச்சி இங்கேயே சாப்பிடலாம் என சொல்கிறார். அதன் பிறகு முத்து நண்பர்களோடு வெளியே செல்வதாக சொல்ல பாட்டி என்னை கேட்காமல் நீ எங்கேயும் போகக்கூடாது போடா உள்ள என உள்ளே விரட்டி விடுகிறார்.
இந்த பக்கம் ரவி வேலைக்கு கிளம்ப விஜயா மனோஜ் இன்டர்வியூ அட்டென்ட் பண்ண போயிருக்கான் வேலை கிடைச்சிடுச்சு என்று சொல்ல பரவால்ல கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்கு போயிட்டான் என அண்ணாமலை சொல்கிறார். விஜயா முத்துவை மட்டம் தட்டி எனக்கு நீங்க ரெண்டு பேரும் தான் பெருமையை தேடி தரப்போற பசங்கனு பேச ரவியும் அண்ணாமலையும் முத்துக்கு ஆதரவாக பேசுகின்றனர்.
அதேபோல் மீனாவை மட்டம் தட்டி பேசி ரோகினி வரட்டும் இந்த வீட்டையே எப்படி மாத்துறான்னு பாருங்க, நான் பார்த்த மருமக என பெருமையாக பேசுகிறார். பிறகு ரவி அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வேலைக்கு கிளம்புகிறார்.
இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.