விஜயாவிற்கு உண்மை தெரிய ரோகினி என்ன சொல்லப் போகிறார் என்று பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா ஸ்ருதியிடம் அனைத்து உண்மைகளையும் சொல்ல அவர் அதிர்ச்சியாகி நிற்கிறார். மேலும் வாங்க அவங்க கிட்டயே நம்ப போய் கேட்கலாம் என்று கிளம்ப மீனா தடுத்து நிறுத்தி, உண்மையை ரொம்ப நாள் மறைக்க முடியாது நம்ம கொஞ்ச நாள் காத்திருக்கலாம் பொறுமையா இருங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
ஆனால் ஸ்ருதி ரவியிடம் சொல்லி விட அவர் ஷாக் ஆகிறார். ஸ்ருதி நான் போய் ரோகினி கிட்ட கேக்கட்டுமா என்று கேட்க ரவி தடுக்கிறார் ஏன் என்று கேட்க வீட்ல பிரச்சனையாகும் என்று சொல்கிறார். இதையே தான் மீனாவும் சொன்னாங்க என்று சொல்லிவிட்டு நீ யார்கிட்டயும் சொல்லிடாத என்று சொல்லிவிடுகிறார். இதை முத்துவிடம் உளறி விடுகிறார் ரவி. எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது ஆனா இது மாதிரி இருக்கும் நான் எதிர்பார்க்கல என்று சொல்லுகிறார் முத்து. உடனே இதை யார்கிட்டயும் சொல்லிடாதே என்று ஓடி விடுகிறார் ரவி.
உடனே அண்ணாமலையிடம் உண்மையை போட்டு உடைக்க அண்ணாமலை குழப்பத்தில் நிற்கிறார். இதற்கு நீ தான் பா ஏதாவது தீர்வு பண்ணனும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் முத்து.
அண்ணாமலை விஜயாவிடம் சொல்ல விஜயா கோபப்பட்டு ரோகிணியை வர சொல்கிறார். நீ முதல் தடவை எப்போ கருத்தரிச்ச, என்று கேட்க ரோகினி அதிர்ச்சியாய் நிற்கிறார். நீ நான் பார்த்து கூட்டிட்டு வந்த மருமக உன்ன தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடிக்கிட்டு இருக்கேன். என்கிட்ட மறைச்ச இந்த விஜய்யாவ யாருன்னு பாப்பா என்றும் மிரட்டுகிறார்.
விஜயாவிடம் உண்மையை ரோகினி சொல்வாரா? இல்லை எப்போதும் போல் மாற்றிப் பேசி நம்ப வைத்து விடுகிறாரா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.