முத்துவின் ஒரே அடியில் சுருண்டு விழுந்துள்ளார் மனோஜின் பாடிகாட்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடு மனோஜ் மற்றும் விஜயா முத்து தான் லெட்டரை எழுதி இருக்கணும் ரெண்டு பேர வீட்ட விட்டு வெளியே போங்க என்று விஜயா சொல்ல மீனா அப்படியெல்லாம் போக முடியாது இதுவும் என் வீடு தான் என்று கோபப்படுகிறார். உடனே விஜயா முத்துவை வர சொல்லு என்று சொல்ல அவர் வந்தார்னா கோபப்பட்டு இவர அடிப்பாரு பரவாயில்லையா என்று கேட்கிறார். நானே போய் சமாதானம் பண்ணி கூட்டிட்டு வரேன் என்று போக அந்த நேரம் பார்த்து முத்து வந்து நிற்க என்ன ஆச்சு மீனா ஒன்று கேட்கிறார். போன் பண்ணா எடுக்க மாட்டீங்களா என்று கேட்க கார் ஓட்டிக்கிட்டு இருந்தேன் என்று சொல்லுகிறார்.
நம்ம எங்கேயாவது வெளியே போலாமா எதுக்கு என்னை தேடின என்று கேட்க , ரெண்டு பேரும் ஒரேடியா ஒன்னா வெளியே போகலாம் என்று மீனா கோபமாக சொல்கிறார் என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அவங்க ஒரு பஞ்சாயத்து போயிட்டு இருக்கு என்று சொல்லுகிறார். யார் என்ன சொன்னாங்க அம்மா ஏதாவது கத்துக்கிட்டு இருக்காங்களா என்ற கேட்க, உங்க அண்ணன் தான் என்று சொல்லுகிறார் பிறகு கடுதாசி வந்த விஷயத்தையும் அதற்கு நீங்க தான் காரணம் என்று சொல்வதையும் மீனா சொல்ல முத்து கோபப்படுகிறார். மீனா எவ்வளவு சமாதானம் சொல்லியும் கோபத்துடன் உள்ளே போகிறார் முத்து போனவுடன் மனோஜை துரத்தி துரத்தி அடிக்க மனோஜ் பயத்தில் அங்கு மிகவும் ஓடுகிறார்.
இதனால் அண்ணாமலை முத்து எனக் கத்தி நிறுத்துகிறார். நான் ஏம்பா இவனுக்கு கடுதாசி போடணும் எனக்கு கோவம் இருந்தா இவனை நேரில் போட்டு மிதிக்க போறேன் நான் எப்படி அப்படி செய்வேன் எதுவா இருந்தாலும் மூஞ்சிக்கு நேரா பேசிட்டு போயிடுவேன் என்று சொல்லுகிறார். ஆனால் அதையும் மீறி மனோஜ் நீதான் பண்ண என்று சொல்லிக் கொண்டே இருக்க முத்துக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. பாடிகார்ட் பின்னால் போய் மனோஜ் ஒலிந்து கொண்டு ஓவராக பேச முத்து பாடிகாடிடம் தம்பி கொஞ்சம் ஒதுங்கிப் போ இது எங்களோட குடும்ப விஷயம் என்று சொல்லுகிறார். ஆனால் மனோஜ் நீ என் குடும்பமே கிடையாதுடா இருந்திருந்தால் என்ன செத்துப் போவேன்னு சொல்லி எழுதி இருப்பியா என்று சொல்ல முத்து கோபப்பட்டு பாடிகாடை ஒரே அடியில் அடித்து படுக்க வைக்கிறார்.இதனை பார்த்த குடும்பத்தினர் மற்றும் மனோஜ் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
அந்த பாடிகாடு குழந்தை போல அழுவ மனோஜ் என்னடா ஹல்க்கு அழுவுற என்று கேட்க குடும்பத்தினர் அனைவரும் சிரிக்கின்றனர். உடனே அவர் நாளைக்கு எத்தனை மணிக்கு பாஸ் வேலைக்கு வரட்டும் என்று கேட்க கடைப்பக்கம் வந்தனா கொன்னுடுவேன் என்று சொல்லுகிறார்.
மீண்டும் மனோஜ் மற்றும் முத்து சண்டை போட ரோகினியிடம் என்ன நடந்தது என்று கேட்கிறார். ரோகினி கோவிலில் நடந்த விஷயங்களை முத்துவிடம் சொல்ல அதற்கு மனோஜ் நீ அந்த நேரத்திலேயே எனக்கு போன் பண்ணி இருந்தா அவனை அங்க வச்சு அடிச்சு உண்மையை வாங்கி இருக்கலாம் என்று சொல்ல அவர்தான் ரஜினி படம் பேருல இருக்கிற ஒருத்தர் என்று சொன்னாரு என்று சொல்ல உடனே ரவி நல்லவேளைப்பா உங்கள நினைக்கலையே, அண்ணாமலை நினைச்சு உங்க கிட்ட வந்து கேட்காம இருந்திருக்கான் என்று பேசுகிறார்.
மீனா எனக்கு ஒன்னு தோணுதுங்க இவருக்கு லெட்டர் கொடுத்தவர்தான் இதை பண்ணி இருப்பாரு என்று மீனா கரெக்டாக சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். ஆனால் விஜயா எனக்கென்னமோ இவன் தான் பண்ணி இருப்பான்னு தோணுது என்று மறுபடியும் சொல்ல உடனே மீனா அவர் அப்படி செய்யலன்னு தானே சொல்றாரு மறுபடியும் ஏன் அப்படியே பேசுறீங்க என்று கேட்கிறார்.
அதற்கு முத்து விடு மீனா இவங்க என் மேல குறை சொல்றதும் அவன் செஞ்ச தப்பை என் மேல சொல்றதோ எனக்கு என்ன புதுசா என்று வருத்தப்படுகிறார். உடனே முத்து உன்ன பிளாக்மெயில் பண்ணி ஏதாவது பணம் கேட்க கூட இப்படி பண்ணலாம் என்று சொல்ல உடனே ஸ்ருதி நான் கூட ஒரு நாவல்ல படிச்சிருக்க ஒருத்தவங்க தப்பு பண்ணா அந்த தப்பை யாராவது ஒருத்தர் கண்டுபிடிச்சிட்டாங்கன்னா அதுக்காக பிளாக்மெயில் பண்ணி பணம் கேட்பாங்க என்று சொல்ல ரோகினி இன்னும் அதிர்ச்சி அடைகிறார். நான் எந்த தப்பும் பண்ணல என்று மனோஜ் சொல்ல உடனே முத்து நீ பண்ணி இருக்கலாம் இல்ல நான் என்று ரோகினியை பார்க்கிறார்.
என்ன நடக்கப் போகிறது? ரோகினி என்ன சொல்லப் போகிறார்? முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.