முத்து மீது கோபமாக இருக்கிறார் மனோஜ்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா அந்த காதல் ஜோடியை கவனித்து ரதியை முன்னால் கூப்பிட்டு ஆட சொல்லுகிறார். அதற்கு அந்தப் பையன் ஏன் மாஸ்டர் எங்க மேல சந்தேகம் படுறீங்களா என்று கேட்க சந்தேகங்கள் எல்லாம் இல்லை நீங்க ரெண்டு பேரும் நல்லா ஆடுறிங்க அதனால பேர் சேஞ்ச் பண்ணா இன்னொரு இருக்கிறவங்களும் நல்லா ஆடுவாங்க என்று சொல்லுகிறார். இனிமே எக்ஸ்ட்ரா பிராக்டிஸ் எல்லாம் எதுவும் பண்ண வேணாம் நான் சொல்லிக் கொடுக்கிறது மட்டும் பண்ணுங்க போதும் என்று சொல்லிவிட்டு பண்ணுங்க என்று சொல்லிவிட்டு விஜயா உள்ளே சென்று விடுகிறார். உள்ளே போனதும் நீ எதுக்கு அப்படி பண்ண என்று விஜயாவிடம் பார்வதி கேட்கிறார். அது மட்டுமில்லாமல் விஜயா நீ சமைக்கிறியா இல்ல வெளிய வாங்கிக்கலாமா என்று கேட்கிறார். மீனா சாப்பாடு எடுத்துகிட்டு வருவாளே என்று சொல்ல அவ வந்தாலே ஏதாவது ஒரு பிரச்சனையா இருக்கு என்று சொல்லிவிடுகிறார். அவங்க ரெண்டு பேரும் கட்டி புடிச்சுகிட்டு நின்னதா மீனா சொல்றா என்று சொல்ல பார்வதி பதறிப் போய் அவங்க வேற எங்க வீட்டுல டான்ஸ் ஆடுறாங்க லவ் பண்ணி வீட்டுக்கு தெரியாம ஓடிப்போயிட்டா நம்மளுக்கு தான் பிரச்சனை என்று சொல்ல விஜய் அதுக்கு அந்த மீனாவே மேல் போல நீ எதுக்கு இப்படி பேசுற என்று கேட்கிறார். நீ அவங்க ரெண்டு பேரையும் நிக்க வெச்சிட்ரியா என்று கேட்க, இல்ல மீனா பேச்ச கேட்டு பண்ற மாதிரி ஆயிடும் என்று பார்வதி மறுக்கிறார்.
மறுபக்கம் மனோஜ் பி ஏ வை சந்திக்க கோவிலுக்கு வருகிறார். ரோகினி நீ போய் பாத்துட்டு வா நான் போறேன் என்று எவ்வளவு சொல்லியும் மனோஜ் வலுக்கட்டாயமாக ரோகினியை கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார். அந்தப் பிஏ சாமியார் கெட்டபில் கோவிலில் நின்று கொண்டிருக்க மனோஜ் ஏதோ சாமியார் வந்து இருக்காங்க போய் பார்க்கலாம் என்று சொல்லுகிறார். அவங்க உன் மனைவி தானே கல்யாணி கல்யாணி என்று சொல்லுகிறார். அப்படின்னா என்ன என்று மனோஜ் கேட்க கல்யாணம் மாதிரி முக கடாட்சமா இருக்காங்க என்று சொல்லுகிறார். பிறகு உன் பேரு மனோஜ் குமார் தானே என்று சொல்ல ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார்.
எனக்கு உன்ன பத்தியும் தெரியும் உன் மனைவி யார் எப்படிப்பட்டவர் என எல்லாமே தெரியும் என்று சொல்லுகிறார். நீங்க யாரை பார்க்க வந்திருக்கணும் எனக்கு தெரியும் அந்த ஆள் கொஞ்சம் முன்னாடி தான் உங்ககிட்ட இந்த லெட்டர் கொடுக்க சொல்லிட்டு போனாரு என்று மனோஜிடம் ஒரு லெட்டரை கொடுக்கிறார். அதைப் பிரித்து படித்து பார்த்த மனோஜ் உன்னை இவ்வளவு நாள் தூங்கவிடாமல் பண்ணது நான்தான். உனக்கு ஒரு க்ளு கொடுக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் டைட்டில் தான் என்னோட பேரு இருக்கு என்று அதில் எழுதி இருக்கிறது.
உடனே மனோஜ் பீம் பாயிடம் ரஜினி சார் நடிச்ச படம் பேரு எல்லாம் சொல்லு என்று சொல்ல அவர் சில படங்களுடன் அண்ணாமலை என்று சொல்லுகிறார். அது எங்க அப்பா பேரு அவர் அந்த மாதிரி பண்ணி இருக்க மாட்டாரு,நீ வேற எதுனா சொல்லு என்று சொல்ல மறுபடியும் அவர் படங்கள் பெயரை சொல்லுகிறார் அதில் முத்து என சொல்ல உடனே முத்துவின் புகைப்படத்தை சாமியாரிடம் காட்டி இவனா கொடுத்துட்டு போனா என்று காட்டுகிறார் உடனே இவன் நம்மள அடிச்சவன் ஆச்சே என்று பிளான் போட்டு ஆமாம் என்று சொல்லிவிடுகிறார் சாமியார். இதனால் கோபமான மனோஜ் வேகமாக அவனை சும்மா விடமாட்டேன் என்று கிளம்பி வருகிறார். வீட்டுக்கு வந்த மனோஜ் வேகமாக சண்டை போட கிளம்ப ரோகினி தடுத்து நிறுத்தி நம்ம கிட்ட எந்த ஆதாரமும் இல்லை எப்படி போய் கேட்ப என்று சொல்ல அதான் அவரே சொல்லிட்டாரு இதுக்கு அப்புறம் என்ன ஆதாரம் என்று கேட்கிறார். உடனே பீம் பாயிடம் நான் உள்ள ஒருத்தனை சொல்றேன் அவன கைய கால ஒடச்சாலும் சரி என்று கூப்பிட்டு சொல்கிறார்.
மேலே வந்த மனோஜ் முத்து முத்து என கத்தி கொண்டுவர எதுக்கு இப்படி கத்திக்கிட்டு இருக்கான் என்று விஜய் கேட்கிறார். அதற்கு மனோஜ் எனக்கு ஒரு லெட்டர் வந்துட்டு இருந்ததுல்ல அது எழுதுனது முத்துதாம்மா என்று சொல்லுகிறார். உண்மையாவா என்று கேட்க உண்மைதான் என்று மனோஜ் சொல்லி மீண்டும் முத்துவை கூப்பிட குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வருகின்றனர். விஜயா உடனே மீனாவை என்ன பண்ணி வச்சிருக்கீங்க என் பையனோட வளர்ச்சி புடிக்காம தான் இப்படி பண்றீங்க என்று பேச மீனா எதுவும் புரியாமல் இருக்கிறார். என்ன லெட்டர் நாங்க என்ன பண்ணுவோம் என்று சொல்ல மனோஜ் இரண்டு லெட்டர் வந்த விஷயத்தை அதிலிருந்து விஷயத்தையும் குடும்பத்தினரிடம் சொல்லுகிறார்.
விஜயா என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.