மனோஜ் சொன்ன வார்த்தையால் முத்து பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதியிடம் மீனா கொலு வைப்பது குறித்து பேசியதை சொல்லுகிறார். கொலு வைப்பது நல்ல விஷயம் தான் அதையே வேணாம்னு சொல்ற என்று கேட்க, ஸ்ருதியோ இல்ல ரோகினியோ சொல்லி இருந்தா பரவால்ல ஆனா இந்த மீனா சொல்லி நான் கேட்கணுமா என்று தோணுச்சு. அதற்குப் பார்வதி இது மீனா சொன்ன விஷயமா இருந்தாலும் விஜயா வீட்டு கொலு தான் எல்லாம் சொல்லுவாங்க என்று சொல்ல சரி செய்யட்டும் என்று சொல்கிறார். மீனா விஜயாவுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வர அங்கு இருக்கும் காதல் ஜோடி தனியாக ரூமில் கட்டிப்பிடித்து இருப்பதை மீனா பார்த்து விடுகிறார்.
அவர்களைக் கண்டிக்க அவர்கள் இருவரும் நாங்கள் டான்ஸ் பிராக்டீஸ் தான் செஞ்சிட்டு இருந்தோம். ஆனா அவங்க தப்பா நினைச்சு எங்கள திட்டிட்டாங்க எங்க அம்மா கூட இப்படி திட்டுவதில்லை என்று நாடகம் ஆடுகின்றனர். இதனை நம்பி விஜயாவும் மீனாவை திட்டி அனுப்பி வைக்கிறார்.
முத்து கொலு பொருட்களை வாங்கிக் கொண்டு வர எல்லாத்தையும் பிரித்து வைக்கிறார் மீனா எல்லாம் வாங்கியாச்சு இல்ல என்று சொல்ல ஆமாங்க என்று சொல்லுகிறார் இதே கரெக்ட்டா அடுக்கி வைக்கணும் இல்லன்னா தெய்வ குத்தம் ஆகிடும் என்று சொல்ல முத்து கிண்டல் அடிக்கிறார். மனோஜ் என்னடா இது என்று கேட்ட ஏற்கனவே பூ வைக்கிறோம் இப்போ பொம்மை கடை வைக்கப் போறோம் என்று சொல்லுகிறார். அதற்கு மனோஜ் வீட்டுக்குள்ள பொம்மை வித்தா எப்படி தெரியும் என்று கேட்கிறார் அதுக்கு தான் நீ வெளியே போடு புடிச்சிட்டு நில்லு, என்று முத்து கிண்டல் அடிக்கிறார்.
கோபமாக ரூமுக்கு போன மனோஜ் ரோகினி அவங்க அம்மாவிடம் போனில் பேசிக்கொண்டே இருக்கிறார் என்று கேட்க வித்யாவோட அம்மா என்று சொல்லி சமாளிக்கிறார். இந்த முத்து என்ன நெனச்சுக்கிட்டு இருக்கான் என்ன பண்றாங்க என்று கேட்க கொலு வைக்கப் போறாங்களாம் என்பதை சொல்ல நம்ம வீட்ல இந்த பழக்கம் இல்லையே என்று மனோஜ் சொல்லுகிறார் ஆமா மீனா ஆசைப்படுறாங்க அதை அங்கிள் கிட்ட சொல்லி இருக்காங்க அவரு ஆன்ட்டி கிட்ட பேச முதலில் ஆன்ட்டி ஒத்துக் கொள்ள அப்புறம் சரின்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல ஏதாவது பண்ணிட்டு போகட்டும் சுண்டல் கொழுக்கட்டை எல்லாம் செய்வாங்கல்ல அதெல்லாம் நீ ஆபீஸ் ல மட்டும் கொண்டு வந்து கொடுத்திடு என்று மனோஜ் சொல்லுகிறார். பங்க்ஷன் ஈவினிங் தான் என்றும் அதற்கு 9 டிரஸ் எடுக்கணும் என்று சொல்லுகிறார். எதுக்கு என்று கேட்க ஒரு ஒரு நாளைக்கு ஒரு ஒரு டிரஸ் போடணும், ரெண்டு போதாதா என்று மனோஜ் கேட்க இல்ல மனோஜ் நாலு டிரஸ் ஆவது எடுக்கணும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரம் பார்த்து முத்து வந்து கதவை தட்ட எதுக்கு வந்து இருக்கீங்கன்னு தெரியும் என்று மனோஜ் சொல்லுகிறார் அப்படியா சொல்லு பாப்போம் என்று சொல்ல கொலு வைக்க பர்மிஷன் தானா வச்சுக்கோங்க என்று சொல்லுகிறார் உடனே முத்து ஐயோ சார் ஒரு பத்திரம் ஒன்னு வாங்கிட்டு வர கையெழுத்து போட்டு தரீங்களா என்று கிண்டல் பண்ணுகிறார். இது மட்டும் இல்லாமல் கொலு நம்ம வீட்ல வைக்கிறதுனால எல்லாரும் சேர்ந்து காசு கொடுக்கணும் நீங்களும் ஐயாயிரம் குடுங்க என்று கேட்கிறார். ஆனால் நாங்கள் ஏன் கொடுக்கணும் கொடுக்க முடியாது என்று மனோஜ் சொல்ல முத்து அப்போ நீங்க ஃபங்ஷன்ல கலந்துக்க கூடாது ரூமிலேயே இருங்க என்று சொல்லிவிடுகிறார். நாங்க ஏன் ரூம்ல இருக்கணும் என்று கேட்க காசு கொடுக்கவில்லை என்றால் அப்படித்தான் என்று சொல்லுகிறார் ஆனால் ரோகினி நான் கொடுக்கிறேன் என்று சம்மதிக்கிறார்.
ரூமில் ரவி இந்தி பாட்டு கேட்டுக் கொண்டிருக்க ஸ்ருதி கடுப்பாகிறார். இது மட்டும் இல்லாமல் உனக்கு இந்தி பாட்டு புரியாதுல எதுக்கு கேக்குற என்று ஸ்ருதி ரவியிடம் சண்டை போடுகிறார். மேலும் உங்க அம்மா வந்திருந்தாங்க என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து மற்றும் மீனா உள்ளே வந்து கொலு வைக்கும் விஷயத்தை சொல்லி ஐந்தாயிரம் காசு கேட்டுக் கொண்டிருக்கிறார் கேட்டவுடனே 2500 எடுத்துக் கொடுத்துவிட்டு சுருதி 2500 ரவி கிட்ட வாங்கிக்கோங்க என்று சொன்ன இவங்கதான் கரெக்டான ஜோடி என்று சொல்லுகின்றனர்.
பிறகு ஸ்ருதி கொலு குறித்து கேட்க மீனா என்ன சொல்லுகிறார்?அதற்கு முத்து சொன்ன பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.