ஸ்ருதயின் அம்மாவிடம் நடந்த விஷயங்களை விஜயா கொளுத்தி போடுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா விஜயாவின் வலிக்கு என்ன செய்வது என்று பூ கட்டுபவரிடம் கேட்க அவர் ஒத்தடம் கொடுத்து பத்து போட்டால் சரியாகும் என்று சொல்கிறார். உடனே மீனா எல்லாத்தையும் ரெடி பண்ணி எடுத்து வைக்கிறார். அந்த நேரம் பார்த்து முத்து வர என்ன மீனா பண்ணிட்டு இருக்க என்று கேட்க அத்தைக்கு ஒத்தடம் கொடுத்து பத்து போடுறதுக்காக ரெடி பண்ணி வச்சிருக்கேன் என்று சொல்ல முத்து கிண்டல் அடிக்கிறார். நீ அங்க போனா அவங்க என்ன சொல்லுவாங்கன்னு நான் சொல்றேன் என முத்து விஜயா போல ஆக்டிங் பண்ணி காட்டுகிறார். இருந்தாலும் மீனா நான் திட்டு வாங்குறது புதுசு கிடையாது என்று சொல்கிறார்.
பிறகு விஜயாவிடம் கொண்டு போய் கொடுக்க அவர் வழக்கம் போல திட்ட மீனா தேவை பட்டா வச்சுக்கோங்க நான் போய் பத்து போடுறேன் என்று வைத்துவிட்டு போய்விடுகிறார். விஜயா அதை எடுத்து வைத்து நல்லா இருக்கே என்று ஒத்தடம் கொடுக்கிறார். சூடு குறைந்து விட்டதால் மீண்டும் சூடு செய்வதற்கு கிச்சனுக்கு வந்த விஜயா அங்கு மேல ஏறி பொருள் தேடிக் கொண்டிருக்கும் மீனாவை திட்டுகிறார். டேபிள் நகர்ந்ததால் மீனா கீழே விழ வர மீனாவை முத்து தாங்கி பிடிக்கிறார்.
உடனே விஜயா மீது மாவு தலை மேலே கொட்ட கடுப்பாகிறார் விஜயா. கிச்சனுக்கு வந்த மனோஜ் பேய் என அலர் அடித்து ஓடுகிறார்.
கிச்சனிலிருந்து வெளியே வந்த விஜயாவை பார்த்து ரோகினி மற்றும் ஸ்ருதி பயப்படுகின்றனர். பிறகு ஸ்ருதி விஜயாவை அந்த கோலத்தில் போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போட போவதாக சொல்ல செல்பி எடுத்துக் கொள்கிறார். இதெல்லாம் பார்த்து விஜயா கோபப்படுகிறார்.
விஜயா குளித்துவிட்டு வர ரோகினி வந்து ஸ்ருதி செய்த வேலையை போனில் காட்ட விஜயாவை இன்னும் கடுப்பாக்கி விடுகிறார். உடனே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என்று பார்வதி வீட்டுக்கு ரோகினி மற்றும் விஜயா கிளம்பி வருகின்றனர்.
பார்வதியிடம் நடந்த விஷயங்களை சொல்ல இப்போ என்ன பண்ணப் போறேன் என்று கேட்க,பாரு என்ன பண்ணப் போறேன் என்று சொல்கிறார். காரில் ஸ்ருதியின் அம்மா வந்து இறங்குகிறார். அவரிடம் ஸ்ருதி குறித்த விஷயங்களை விஜயா சொல்கிறார்.
விஜயாவின் கேள்விக்கு ஸ்ருதியின் அம்மா சொல்லப் போகும் பதில் என்ன? என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.