விஜயா மீனாவை திட்ட, ஸ்ருதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா மற்றும் மனோஜை ஸ்ருதி பயத்தில் நடுங்க வைக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் மீனா லைட் போட்டு விஜயாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். இதுக்கெல்லாம் நீதான் காரணமா என்று மீனாவை திட்ட ,சிரித்துக் கொண்டே வெளியே வந்த ஸ்ருதி அவங்களாம் எதுவும் பண்ணல நான் தான் பன் பண்றதுக்காக அப்படி பண்ணேன் என்று சொல்லுகிறார்.
காலையில் முத்து வீட்டுக்கு வர முத்துவிடம் நடந்த விஷயங்களை சொல்கிறார் மீனா. எங்க அம்மாவையே பயமுறுத்துட்டீங்களா இவ்வளவு பெரிய விஷயம் என்று கிண்டல் அடிக்கிறார் முத்து. பிறகு டயர்ட் ஆக இருக்கு நான் குளிச்சிட்டு வரேன் என்று சொல்ல மீனா எண்ணெய் காய்ச்சி எடுத்துட்டு வரேன் சூடு குறையும் என்று செல்கிறார்.
மறுபக்கம் சுருதி ரவிக்கு புது டி-ஷர்ட் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க ஆனால் இந்த கலர்ல என்கிட்ட இருக்கு என்று அது வேற ஒண்ணா கூட இருக்கலாம் என்று சொல்ல இதே தான் வேணும்னா பெட்டு கட்டவா என்று பேசுகிறார் ரவி. இதனால் கோபமடைந்த ஸ்ருதி வேகமாக வெளியே வர எதிரில் வந்த மீனாவை இடிக்க அவர் கையில் வைத்திருந்த எண்ணெய் கீழே கொட்டி விடுகிறது.
ஸ்ருதி நான் சுத்தம் செய்கிறேன் என்று சொல்ல, மீனா உங்க டிரஸ்ல எல்லாம் ஆயிடும் நீங்க போங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். திரும்பவும் உள்ளே சென்று ரவியிடம் சண்டை போடுகிறார். என்னாச்சு என்று ரவி கேட்க உன்னிடம் கோபமாக பேசிக்கொண்டு மீனா மேலே எடுத்து விட்டேன் அவங்க ஒரு ஆயில் வெச்சிருந்தாங்க அது கீழே கொட்டிருச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரம் பார்த்து விஜயா வந்து எண்ணெயில் கால் வைக்க மீனா பிடிக்க போய் இரண்டு பேரும் கீழே விழுந்து விடுகின்றனர். வழக்கம்போல் இதற்கு மீனாதான் காரணம் என்று விஜயா திட்ட சுருதி அவங்க எதுவும் பண்ணல நான் தான் பண்ண என்று சொல்லியும் மீனாவை தான் திட்டுகிறார். மனோஜ் விஜயாவை தூக்க போக இரண்டு பேரும் வழுக்கி விழுகின்றனர்.
அவ என்ன கொல்ல பாக்குறா என்று சொல்ல மனோஜ் என்னையும் தாம்மா என்று என்று சொல்லுகிறார் உடனே கோபமாக ஸ்ருதி வருகிறார்.
விஜயாவிடம் ஸ்ருதி என்ன பேசினார்? அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.