ரோகினி பற்றிய உண்மை மீனாவுக்கு தெரியவந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கட்டில் காலில் இடித்து கொண்டு வலியின் கத்த முத்து இன்னொரு காலை மிதித்து விடுகிறார். விஜயா இந்த கட்டில் இங்க இருக்கக்கூடாது என்று சொல்ல அப்போ இங்க இல்லன்னா டைனிங் ஹால்ல போட்டுக்கொள்ள வா என்று நக்கல் அடிக்கிறார். பிறகு பார்வதி இதுக்கு மேல இங்க இருந்தா என்னையும் சேர்த்து சொல்லுவான் வா உள்ள போயிறலாம் என்று கூட்டி செல்கிறார்.
மறுபக்கம் மீனா பூ கட்டுபவர்களிடம் முத்து நடந்து கொண்ட விஷயத்தை சொல்லி சந்தோஷப்பட்டு பேசுகிறார். அந்த நேரம் பார்த்து சீதா 5 மொழம் பூ எடுத்துக்கொண்டு நான் வேலை பாக்கும் ஹாஸ்பிடலுக்கு வா அக்கா என்று கூறுகிறார். அங்கு சென்ற மீனா என்ன விஷயம் என்று கேட்க இனிமே நாங்க வாங்க போற பூ ஆர்டர் எல்லாம் உன்கிட்ட தான் கொடுக்கப் போறோம் என்று சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார். இனிமேல் நீ வீட்டுக்கு காசு தர வேண்டாம் என்று சொல்ல மீனா கண்கலங்குகிறார்.
அதே ஹாஸ்பிடலுக்கு ரோகினி வர மீனா அவரை பார்த்து விடுகிறார். என்னன்னு போய் கேளுகா என்று சொல்ல வேணா ஏற்கனவே அவங்க என்னோட விஷயத்துல தலையிடாதீங்க என்று பேசிட்டாங்க என்று சொல்ல சீதா நான் போய் விசாரிக்கிறேன் என்று கேட்கிறார். மீனா எவ்வளவு தடுத்தும் கேட்காத சீதா ரிசப்ஷனில் சென்று விசாரிக்கிறார்.
ரோகினி இரண்டாவது குழந்தைக்காக டிரீட்மென்ட் வருகிறார் என்று சொல்ல அதிர்ச்சி அடைகிறார் சீதா. மீனாவிடம் சொல்ல மீனா அதிர்ச்சியாகி உட்கார்ந்து விடுகிறார். சீதா நர்ஸ்சிடம் விசாரிக்கவா என்று கேட்க இதுக்கு மேல இதை பத்தி யார்கிட்டயும் கேட்காத யார்கிட்டயும் சொல்லாத என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
குழப்பத்தோடு மீனா வீட்டுக்கு வருகிறார். அந்த நேரம் பார்த்து ரோகினி,மனோஜ் ஸ்வீட்டுடன் வந்து குட் நியூஸ் என சொல்ல அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? அந்த குட் நியூஸ் என்னவாக இருக்கும்? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.