SiragadikkaAasai Serial Today Episode Update 21-08-24
SiragadikkaAasai Serial Today Episode Update 21-08-24

முத்து,மீனா மீது கோபப்பட விஜயா சந்தோஷமாகி உள்ளார்.

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து குடித்துவிட்டு வந்து மீனா விடம் வாக்குவாதம் செய்ய பதிலுக்கு மீனாவும் கோபப்படுகிறார். சாப்பிட கூப்பிட முத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டு படுத்து விடுகிறார். அந்த நேரம் பார்த்து விஜயா வர மீனா இப்போ உங்களுக்கு சந்தோஷமா என்று கேட்கிறார் அதற்கு விஜயா என்னடா இது கொஞ்ச நாள் குடிக்காம வரான் என்று பார்த்தேன். ஆனா அவன் இப்ப குடிச்சதுக்கு காரணம் நீதான் என்று மீனாவை சொல்லி விட்டு எனக்கு அல்வா சாப்பிடணும் போல இருக்கு என்று சொல்லுகிறார். பையன் குடித்துவிட்டு வந்தால் சந்தோஷப்படும் அம்மாவை முதல் முறையாக இப்பதான் பார்க்கிறேன் என்று மீனா சொல்ல விஜயா கிளம்பி விடுகிறார்.

காலையில் முத்து எழுந்து வர அண்ணாமலை லேட்டாக வந்தியா என்று கேட்கிறார் ஆமாம் சவாரி என்று சொல்லிவிட்டு ஃப்ரெஷ்அப் ஆகிறார். மீனா காபி கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு குளிக்க செல்கிறார். முத்துவின் கார் சாவியை எடுத்து கொள்கிறார். முத்து சாவியை தேடி அலைய அண்ணாமலை குடிச்சிட்டு வந்தியா என்று கேட்க அந்த நேரம் பார்த்து விஜயா ஆமாம் என்று சொல்லுகிறார் மீனாவிடம் இதற்கு மேல் குடிச்சிட்டு வந்தா வீட்டுக்குள்ளே சேர்க்காத கதவு திறக்க வேண்டாம் என்று சொல்ல மீனாவும் சம்மதிக்கிறார்.

கிச்சனிலிருந்து சாவியை எடுத்து வந்து மீனா கொடுக்க, வேண்டுமென்றே அப்பா கிட்ட சொல்லனும்னு இப்படி பண்ணியா என்று கோபப்பட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த முத்து கோபமாக இருக்க இன்னும் நீ சத்யா விஷயத்தை மறக்கலையா என்று கேட்க அவன் என்ன துளி கூட மதிக்கிறது கிடையாது. அப்படி இருக்கும்போது நான் சொல்லியும் இவ போயிருக்கா,இவளுக்காக நான் மட்டும் எதுக்கு உழைக்கணும் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனாவின் அம்மாவும் தங்கையும் வருகின்றன.

முத்துவிடம் என்ன பேசினார்கள்?முத்து சொன்ன பதில் என்ன? கோபம் குறைந்ததா? இல்லையா? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.