விஜயா பார்த்த வேலையால் முத்து கோபமாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதி மீனாவை போகச் சொல்லி அட்வைஸ் கொடுக்கிறார் முதலில் மறுத்த மீனா பிறகு கிளம்பி செல்கிறார். அப்போ ஒரு பிரச்சனை இருக்கு என்று விஜயா சந்தோஷப்படுகிறார். மீனாவின் அம்மா வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனா வர அனைவரும் சந்தோஷப்படுகின்றன.
பிறகு சத்யாவிற்கு வாழ்த்து சொல்ல, வேண்டுதலை தொடங்குகின்றன. வீட்டுக்கு வந்த முத்து மீனா,மீனா என கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். ஆனால் விஜயா நீ டேங்க் மேலே ஏறி கத்துனாலும் மீனா வரமாட்டா என்று சொல்கிறார். மீனா கோயிலுக்கு போய் இருக்கா என்று சொல்ல முத்து நம்ப மறுக்கிரார். விஜயா மீது கோபப்பட என்கிட்ட எதுக்கு கத்துற போய் கோயில்ல பாரு உன் செல்ல பொண்டாட்டியோட அருமை தெரியும் என்று சொல்ல முத்து கோபமாக கிளம்பி வருகிறார்.
கோயிலில் கூழை கையில் வாங்கிய முத்து, தம்பி பாசமா புருஷன் பாசமா என்று இருந்த சந்தேகம் இன்று தெரிந்து விட்டது. அவ்வளவு சொல்லியும் நீங்க வந்து இருக்க என்று கோபமாக பேசிவிட்டு கிளம்புகிறார். வீட்டுக்கு வந்த அண்ணாமலையிடம் கூழ் கொடுக்க குடிக்கிறார். விஜயாவிடம் கொடுக்க நக்கலாக பேசுகிறார். பிறகு நடந்த விஷயங்களை மீனா விடம் சொல்கிறார் விஜயா. முத்துவுக்காக மீனா காத்துக் கொண்டிருக்க முத்து குடித்து விட்டு வருகிறார்.
முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனா கொடுக்கப்போகும் பதில் என்ன?என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்