சீதாவை ஸ்ருதி சந்திக்க, கண்டிஷன் போட்டுள்ள சத்தியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சத்யாவிடம் உன்ன கஷ்டப்பட்டு படிக்க வெச்சா நீ இவன் கூட சேர்ந்து சுத்திகிட்டு இருக்க ஒரு நாள் ஏதாவது ஒன்னு பிரச்சனைல மாட்டிவிட்டு போகப்போறான் அப்ப தெரியபோது என்று சொல்ல அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க என்று சொல்லி விடுகிறான் சத்யா.
ஸ்ருதி சீதாவை வந்து சந்தித்து வாட்ச்சை பரிசாக கொடுத்து கட்டி விடுகிறார். மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள போகிறேன் என்று சீதாவிடம் சொல்லி அதற்கு ஏதாவது ஆள் இருந்தா சொல்லு என்று சொல்லி விடுகிறார். சீதாவும் சரி என்று சம்மதிக்கிறார். இந்த விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் குறிப்பாக மீனாவிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மறுபக்கம் சத்யாவிடம் அம்மா கையைப்பற்றி விசாரித்து கொண்டிருக்க, கை எல்லாம் நல்லா ஆயிடுச்சு என்று சொல்ல, நல்லா ஆனா சாமிக்கு கூழ் ஊத்துவதாக வேண்டிக்கிட்டு இருக்கேன் என்று கோவிலுக்கு கூப்பிட முதலில் வர மறுக்கும் சத்யா பிறகு சம்மதிக்கிறார். அக்காவையும் மாமாவையும் கூப்பிடுகிறேன் என்று சொல்ல அக்காவை மட்டும் கூப்பிடு அந்த ஆள கூப்பிடாத என்று சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து மீனா வருகிறார். நடந்த விஷயத்தை மீனாவிடம் சொல்ல மீனா கோபப்படுகிறார். மீனா அவ்வளவு சொல்லியும் அவர் வரக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் சத்யா.
முத்துவிடம் மீனா விஷயத்தை சொல்ல முத்துவும் வர மறுக்கிறார். இது மட்டும் இல்லாமல் மீனாவையும் போகக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்பு செல்கிறார்.
யோசித்துக் கொண்டிருக்கும் மீனா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? முத்துவின் வார்த்தையை மீறுவாரா? இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.