மனோஜ் கிப்ட் வாங்கி கொடுக்க, முத்துவிடம் சிக்கி உள்ளார் சிட்டி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா எனக்கு என்ன வாங்கிட்டு வந்த மனோஜ் என்று கேட்க புடவையை எடுத்து கொடுக்கிறார். முத்து அப்பாவிற்கு என்ன வாங்கினேன் என்று கேட்க ஒரு வாட்ச் எடுக்க விஜயா அப்பாவிற்கு எதற்கு வாட்ச் என்று நக்கலாக பேசுகிறார். அதற்கு மனோஜ் வாட்ச் அவருக்கு இல்லை எனக்கு என்று சொல்லுகிறார். வாட்ச்சின் விலை பற்றி கேட்க 51 ஆயிரம் என்று சொல்ல அனைவரும் ஷாக்காகின்றன.
முத்து சரி அப்பாவுக்கு என்ன வாங்குன சொல்றா என்று கேட்க துண்டை எடுத்துக் கொடுக்கிறார். முத்து கோபப்பட அண்ணாமலை எனக்கு சந்தோஷம் தான் என்று எழுந்து செல்கிறார். பிறகு மனோஜிடம் ரோகிணி இந்த பணம் எப்படி வந்தது என்று கேட்க பேங்க்ல இருந்து கிரெடிட் கார்டு வந்தது அதுல இருந்து தான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்கிறார். நான் பண்ணது தப்பா என்று கேட்க இல்லை என்று சொல்கிறார் ரோகினி. நீ வந்ததுக்கப்புறம் என் லைஃப்ல நல்லது நடந்துகிட்டு இருக்கு. நீ என்னோட லக்கி சாம் என்று சொல்கிறார். மேலும் கார்ட் லிமிட் இருக்கிறது கோவா போயிட்டு வரலாம் என்று சொல்ல சீக்கிரமா போலாம் என்று சொல்லி கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.
சிட்டி சத்யாவுடன் சேர்ந்து ஒரு வீட்டிற்கு வந்து காசு கேட்கின்றனர். அந்த வீட்டுக்காரர் முத்துவின் காரில் வந்து இறங்க பேகை மறந்து விட்டுப் போகிறார். சிட்டி அவரை மிரட்டி கொண்டிருக்கும் அந்த நேரம் பார்த்து முத்து entry கொடுக்கிறார். சிட்டியிடம் கோபமாக பேசுகிறார். ஆனால் முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணுங்க என்று சொல்ல பண்ணுங்க எனக்கு என்ன அப்படின்னு சிட்டி சொல்ல உனக்கு ஒன்னும் இல்ல தான் சொல்லுவ ஆனா நீ பேசினது எல்லாத்தையும் நான் வீடியோ எடுத்து வச்சிருக்கேன் இப்ப பண்ணட்டுமா என்று சொல்ல வேணாம் என்று சொல்லுகிறார் சிட்டி.
பேனா பேப்பரை எடுத்து வர சொன்ன முத்து பிறகு சிட்டியிடம் இருந்து அவர்களை எப்படி காப்பாற்றினார்? அந்த லெட்டரில் எழுதியது என்ன? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.