முத்துவும், மீனாவும் பங்க்ஷனுக்கு கிளம்ப, முத்து அதிர்ச்சியாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து செல்வத்திடம் பணத்தை கொடுக்க அவர் வாங்க மறுக்கிறார். என்னாச்சு என்று கேட்டும் யாரும் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கின்றன. ஒரு கட்டத்துக்குள் செல்வம் கிளம்ப முயற்சி செய்ய முத்து விடாமல் தடுத்து நிறுத்துகிறார். வற்புறுத்தி கேட்க செல்வம் மீனா வந்த விஷயத்தை சொல்லுகிறார் நெனச்ச அவ தான் வந்து இருப்பான்னு, அவங்க மேல எந்த தப்பும் இல்ல அவங்க சொன்னது சரிதான் நம்ம டெய்லியும் கஷ்டப்படுறவங்க நம்ம எதுக்காக செலவு பண்ணனும் என்று செல்வம் சொல்கிறார். கோபப்பட்ட முத்து காரின் மேலே பணத்தை வைத்து விட்டு என்னோட பிரண்டா இருந்தா எடுத்துக்கோ என்று வைத்துவிட்டு கோபமாக கிளம்ப, காரில் ஏற போகும்போது திரும்பி முத்து பார்த்து கொண்டு இருக்க செல்வம் என்ற பணத்தை எடுத்துக் கொள்கிறார்.
கோபத்தில் வீட்டுக்கு வந்த முத்து மீனாவை வேகமாக மாடிக்கு எடுத்து வந்து, செல்வத்தை பார்த்து காசு வாங்க வேண்டாம்னு சொன்னியா என்று கேட்க நான் அப்படி சொல்லல நம்ம தகுதிக்கேத்த மாதிரி செலவு பண்ண வேண்டியது தான் சொன்னேன் அதை சொல்றதுக்கு நீ யாருன்னு கோபப்படுகிறார். மேலும் ஒரு லட்சம் பேங்கில் இருந்து எடுத்துக் கொடுத்த விஷயத்தை மீனாவிடம் சொல்ல மீனா அப்போ உன் அண்ணனுக்கும் உங்களுக்கு என்ன வித்தியாசம் இருக்கு என்று கோபமாக கேட்க முத்து கோபத்தில் அறைய கை ஓங்குகிறார். அவன் கூட சேர்த்து வச்சு பேசிட்ட இல்ல என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மறுநாள் செல்வத்தின் அம்மா அப்பாவின் அறுபதாம் கல்யாணத்திற்கு முத்து கிளம்பி கொண்டிருக்க எங்கப்பா வேலையா என்று அண்ணாமலை கேட்கிறார். இல்லப்பா அறுபதாவது கல்யாணம் போற என்று சொல்ல 60 கல்யாணத்துக்கு போறியா என்று அண்ணாமலை கேட்க என்ன கிண்டல் பண்றியா அப்பா என்று சொல்லுகிறார். நீ மட்டும் போறியா? மீனா வரலையா என்று கேட்கிறார். அது இல்லப்பா என்று சமாளித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கதவை திறந்து மீனா வந்து போலாமா என்று கேட்கிறார். உடனே இருவரும் கீழே வர முத்து இப்பவாவது நான் செஞ்சது சரின்னு உனக்கு புரிஞ்சது இல்லை என்று சொல்ல இப்போவும் எனக்கு அதுல விருப்பம் இல்லை ஆனால் உங்க மரியாதைக்காக தான் நான் வரேன் என்று சொல்லுகிறார்.
ஃபங்ஷனுக்கு வந்த முத்து மீனாவை செல்வத்தின் மனைவி வரவேற்கிறார். செல்வம் எங்கே என்று கேட்க பின்னாடி போய் பாருங்க அண்ணா என்று சொல்ல ஒரு அண்டாவில் சரக்கை ஊற்றி மிக்ஸ் பண்ணி அனைவருக்கும் கொடுத்துவிட்டு அவரும் குடிக்கிறார். இதனை பார்த்து முத்து அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.
மீனாவும் அதைப் பார்த்து விட முத்து சமாதானப்படுத்தி சாப்பிட கூப்பிடுகிறார் சாப்பிட உட்கார்ந்து இடத்தில் இரண்டு பேர் என்ன சாப்பாடு உங்க அண்ணன் கெடா வெட்டி விருந்து போட்டான் கறி அவ்வளவு நல்லா இருந்தது. இது பிரியாணி இல்ல கோவில் புளியோதரை மாதிரி இருக்குது என்று சண்டை போடுகின்றனர்.
இதெல்லாம் பார்த்த முத்து என்ன செய்கிறார்? என்ன பிரச்சனை நடந்தது? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.