விஜயா பாட்டு பாடி குடும்பத்தை அலற விட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கொலு ஏற்பாடுகள் சிறப்பாக மீனா செய்து முடிக்கிறார். முத்து மீனாவை பார்த்து ஒரு கொலு மட்டும் மிஸ்ஸிங் ஆனா மேல உட்கார வைக்க முடியாது பக்கத்துல ஒரு சேர் போட்டு உட்கார வைத்து விடலாமா என்று சொல்ல மீனா என்ன சொல்றீங்க எதுவும் மிஸ் பண்ணிட்டேன் என்று தேடுகிறார் உடனே முத்து நீதான் அந்த கொலு என்று சொல்ல மீனா சிரிக்கிறார். இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பார்வதி மற்றும் டான்ஸ் கிளாஸில் இருப்பவர்கள் வருகின்றனர். ஒவ்வொருவராக வர பிறகு மீனாவின் அம்மாவும் சீதாவும் வருகின்றனர். உடனே விஜயாவின் முகம் மாற அண்ணாமலை கூப்பிடுகிறார். பழமொழி செய்து கிண்டல் பண்ண முத்து வேற ஏதாவது பழமொழி சொல்லுங்க இது நல்லா இல்ல என்று பதிலடி கொடுக்கிறார்.
அதன் பிறகு ரதியும் அந்தப் பையனும் ஒன்றாக வந்து மைக்செட் ஸ்பீக்கர் கொண்டு வந்து உ விஜயாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். மீனா இதை முத்துவிடம் சொல்ல இவன் ஆளே சரியில்ல என்று சொல்லுகிறார். வித்யா ரோகினி இடம் நீ என்ன பண்ண போற பி ஏ வேற பார்லருக்கு வந்துட்டு போயிருக்கான் என்று சொல்ல அதுதான் அந்த சிட்டி பாத்துக்குறேன்னு சொன்னேன்ல என்று சொல்லுகிறார். இந்த முத்துவோட போன் தான் மாட்ட மாட்டேங்குது இன்னைக்கு எப்படியாவது மாட்டுதானு பாக்கலாம் என்று சொல்லுகிறார். உடனே மீனா, ஸ்ருதி, ரோகினி என அனைவரும் விளக்கேற்ற பூஜையை ஆரம்பிக்கின்றனர்.
விஜயா தீபாரதனை காட்டிவிட்டு முடிக்க பார்வதி கத்த ஆரம்பி என்று சொல்லுகிறார் என்ன என்று கேட்க இல்ல பாட்டு பாடு என்று சொல்லுகிறார். உடனே பாட்டு பாட உட்கார்ந்த விஜயா சரிகமப என ஆரம்பித்த உடனேயே அனைவரும் காதை பொத்தி வெளியில் கொள்கின்றனர் வெளியில் நாய்கள் அதிகமாக கத்துகிறது. விஜயாவின் பாட்டை கேட்க கேட்க நாயின் சத்தம் அதிகமாக இருக்கிறது. இதனால் முத்து நான் போய் விரட்டிட்டு வரேன்பா அம்மா பாடும் போது நாய் டிஸ்டர்ப் பண்ணலாமா என்று நாயை விரட்ட செல்லுகிறார். வித்யா ரோகினியுடம் உங்க மாமியாருக்கு மொட்ட ராஜேந்திரன் வாய்ஸ் அப்படியே இருக்கு என்று சொல்ல ரோகினி சிரிக்கிறார். பிறகு நாயை துரத்தி விட விஜயா மீண்டும் பாடுகிறார். அனைவரும் பாட்டை கேட்டு மிரண்டு போக அண்ணாமலை ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என கேட்க, விஜயா சந்தோஷமாக பாடுகிறார்.
மீண்டும் நாலு முறை அண்ணாமலை ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என கேட்க குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்து இது உனக்கே ஓவரா தெரியலையாப்பா என்று கேட்க உங்க அம்மா ரொம்ப நாள் கழிச்சு பாடறதனால கொஞ்ச நேரம் கழிச்சு வாய்ஸ் சரியாயிடும் என்று சொல்லுகிறார். உடனே கீழே இருக்கும் ஒருவர் கூப்பிட முத்து ஜன்னலில் என்ன அண்ணா என்று கேட்கிறார். கொலு வைக்கிறதெல்லாம் சரிப்பா உங்க அப்பா ஏன் லேடிஸ் வயசுல பாடிகிட்டு இருக்காரு என்று கேட்க குடும்பத்தினர் அனைவரும் சிரிக்கின்றனர். உடனே விஜயா கோபப்பட்டு அதுக்கு தான் இசை தெரியாதவங்க கிட்ட பாட கூடாது என்று கோபமாக எழுந்து சாரின் உட்கார்ந்து விடுகிறார். முதலில் சுருதியை பாட சொல்ல எனக்கு டப்பிங் தான் பேச வரும் பாட்டு பாட தெரியாது என்று சொல்லுகிறார். விஜயா ரோகினியை பாட சொல்ல அவர் எனக்கு வராது ஆன்ட்டி என்று சொல்ல ஆமா அவளுக்கு ரீல் சுத்த தான் வரும் என்று வித்யா சொல்லுகிறார். உடனே ரீல்ஸ் பண்ண தான் வரும் என்று மாற்றுகிறார்.
மீனாவின் அம்மா நீ போய் பாடும் மீனா என்று சொல்ல முதலில் பாட மறுக்கும் மீனா, பிறகு அம்மன் பாடல் பாடுகிறார். அனைவரும் ரசித்து கேட்டு கைதட்டுகின்றனர். உடனே விஜயா எல்லாருக்கும் பிரசாதம் குடுங்க போதும் என்று சொல்ல முத்து மீனாவும் எழுந்திருக்க முத்து போனை பக்கத்தில் வைக்கிறார். ரோகினி வித்யாவிடம் கண்ணை காண்பித்து முத்துவின் போனை எடுக்க சொல்ல அவரும் கையில் எடுத்துக்கொள்ள சிறிது நேரத்தில் வித்யாவின் கையில் இருக்கும் போனை முத்து பார்த்து விட்டு வாங்கிக் கொள்ளுகிறார் நான் வச்சிக்கிறேன் பரவால்ல என்று சொல்ல என்கிட்ட பாக்கெட் இருக்கு நான் வச்சிக்கிறேன் என்று வித்யாவிடம் இருந்து வாங்குகிறார்.
பங்க்ஷன் முடிந்த பிறகு இரவு மீனாவிற்கு முத்து காலை பிடித்து விடுகிறார். மீனா எவ்வளவு தடுத்தும் இன்னைக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு வேலை செஞ்சா கால் வலிக்காமல் எப்படி இருக்கும் நம்ப வேணா நாலு குறைச்சுக்கலாமா என்று சொல்ல, கொலுனா ஒன்பது நாள் தான் வைக்கணும் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் கொஞ்சமா சரியா போயிடும் நீங்க காலை பிடிக்கிறதை விடுங்க என்று சொல்லுகிறார்.
முத்துவிடம் மீனா என்ன சொல்லுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்