மூன்று ஜோடிகளும் போட்டியில் கலந்து கொள்கின்றன.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போட்டியில் மூன்று ஜோடிகளும் கலந்து கொள்ள போவதாக சொல்லுகின்றன. ஆனால் மூன்று பேரும் நாங்கள் தான் ஜெயிப்போம் என்று ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்கின்றன. ரோகினி போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொல்ல மனோஜ் கண்டிப்பாக கலந்து கொள்ளலாம் நம்ப தான் ஜெயிப்போம் என்று சொல்லுகிறார். ரோகினியும் ஒகே என்று சொல்கிறார்.
முத்துவும் மீனாவும் போட்டி எப்படி இருக்கும் என்று மாறி மாறி பேசி கொள்ள முத்து டான்ஸ் ஆட சொல்லுவார்களோ என்று மீனாவை இழுத்து டான்ஸ் ஆடுகிறார். பிறகு ரவி ஸ்ருதியிடம் கேட்கலாம் என்று மீனா சொல்ல ரூமில் பார்க்க இரண்டு பேரும் ரூமில் இல்லாததால் மேலே வந்து பார்க்கின்றன. மேலே வந்து பார்த்தால் இரண்டு பேரும் மல்லுக்கட்டி கொண்டு இருக்க முத்து ஓடி வந்து விலக்கிவிட்டு ரவியை திட்டுகிறார். நாங்க பிராக்டிஸ் பண்ணி கொண்டு இருக்கிறோம் என்று சொல்லுகின்றன.
ஸ்ருதி முத்து மீனாவிடம் மாறி மாறி கேள்வி கேட்க இருவருக்கும் பதில் தெரியாமல் யோசிக்க இது செட் ஆகாது என்று முத்து சொல்ல ஸ்ருதி பிரிபேர் ஆகிக்கோங்க என்று சொல்லுகிறார். சரி என சொல்லி இருவரும் ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு கிளம்புகின்றன.
பிறகு அனைவரும் போட்டியில் கலந்து கொள்கின்றன. அனைவரும் பெயர் மற்றும் அவர்களது வேலையை சொல்லி இண்ட்ரொடுக்ஷன் கொடுக்க அனைவரும் கைதட்டுகின்றன .ஆனால் முத்து,மீனா சொல்லும்போது யாரும் கைதட்டாமல் இருக்க முத்து வருத்தப்படுகிறார்.
பிறகு போட்டி தொடங்க லேடிஸ் மட்டும் வர வைத்து உங்களுக்கு என்ன திறமை இருக்கு என்று கேட்க அனைவரும் சொல்ல மீனா மட்டும் தயங்கி நிற்க மனோஜ் நக்கல் அடிக்கிறார்.
மீனாவின் திறமையை முத்து சொல்ல மீனாவும் ஆமாம் சொல்கிறார், முத்து சொன்ன திறமை என்ன? ரோகினி டாஸ்க் எப்படி முடித்தார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.