விஜயாவை பயத்தைக் காட்டி அலற விட்டுள்ளார் மனோஜ்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் விஜயாவிடம் லெட்டரை கொடுத்து நடந்ததை சொல்கிறார். விஜயா அப்படி எல்லாம் நடக்காது என்று சொல்ல, ஒரு திருடன் திடீர்னு வீட்டுக்கு வந்து அவன் அப்பா கத்தியால குத்தி அதை நீ பார்த்து உனக்கு ஹார்ட் அட்டாக் வந்து, ரோகினியை மேலிருந்து தள்ளிவிட்டு தப்பிச்சு போக,முத்து அவன கொன்னுட்டா ரோகிணி போன துக்கத்துல நான் தற்கொலை பண்ணிக்குவேன் என்று ஒரு கதையை மனோஜ் சொல்லி விஜயாவை பயமுறுத்துகிறார். மாடியில் நடந்து வரும் சத்தம் கேட்க திருடன்தான் வரான் என்று முடிவு பண்ணி இருவரும் அலறுகின்றனர். ரோகினி மேலே வர நடந்த விஷயங்களை சொல்லி லெட்டரை கொடுக்க அப்படி எல்லாம் நடக்காது என்று சொல்லி விடுகிறார்.
மறுநாள் முத்துவிற்கு மீனாவின் அம்மா போன் போட மீனா போன் எடுக்கலை என்று கேட்க சுவிட்ச் ஆப் ஆயிருக்கும் என்று சொல்லி மீனாவிடம் போனை கொடுக்கிறார். நேத்து வீட்டுக்கு வரேன்னு சொன்ன வரலியா என்று கேட்க பூ கட்டுற இடத்துல லேட் ஆயிடுச்சு என்று சொல்லுகிறார்.
சீதாவிடம் பேச எங்க ஆஸ்பிட்டல்ல ஒரு ஆஃபர் போட்டு இருக்காங்க குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடி செக் எல்லா செக்கப் போன் பண்ணிக்கலாம் பாதி காசு தான் என்று சொல்ல மீனா இங்கே இருக்கிறவங்களுக்கு யாருக்குனா எப்போ வேணா பொறக்கட்டும் அதைப்பற்றி நீ கேட்காத என்று கோபப்பட சரி வச்சுட்டுக்கா என்று சொல்லுகிறார். உடனே சத்யா பத்தி விசாரிக்க அவன் குரூப் ஸ்டடிக்காக போயிருக்கா என்று சொல்ல முத்து குரூப் ஸ்டடிக்கு போய் இருக்கானா இல்ல குரூப்பா குடிக்க போயிருக்கானான்னு எனக்கு தான் தெரியும் என்று முணுமுணுக்கிறார். மீனா அவனைப் பத்தி குறை சொல்லிக்கிட்டே தான் இருப்பீங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
ரோகினி அம்மாவிற்கும் பையனுக்கும் தங்குவதற்கு வீடு பார்க்க வருகிறார். யாரெல்லாம் இருப்பீங்க என்று கேட்க நான் எங்க அம்மா என் பையன் என்று ரோகினி சொல்ல வீட்டுக்காரர் பத்தி ஹவுஸ் ஓனர் கேட்கிறார். அவர் துபாயில் இருப்பதாக சொல்ல அப்படின்னா கொடுக்க முடியாது ஏற்கனவே ஒரு பிரச்சனையாகிடுச்சு என்று சொல்லுகிறார். அந்த ஹவுஸ் ஓனரிடம் எந்த பிரச்சனையும் வராது என்று பேசி ஒரு வழியாக சம்மதித்து டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து விட்டு வருகிறார்.
மீனா அந்த செருப்பு தைக்கும் தாத்தா பாட்டிக்கு இன்றும் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகிறார். வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இருவரும் என்ன தாத்தா வேலையா என்று கேட்க இப்பதா அம்மா வேலையே வந்து இருக்கு ஒருத்தரு மூணு ஜோடி செருப்பு கொடுத்து தைக்க சொல்லி இருக்காரு என்று சொல்ல நீனா யார் என்று பார்க்க அங்கு பார்த்தால் முத்து நிற்கிறார். மீனா முத்துவை பார்த்து சந்தோஷப்படுகிறார். இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ள அங்கு இருக்கும் தாத்தா உன்னோட புருஷன் கூட 100 வயசு வரைக்கும் சந்தோஷமா வாழ்வம்மா என்று வாழ்த்துகிறார். உடனே முத்துவும் மீனாவும் சந்தோஷப்பட்டு சிரித்துக் கொள்ள மீனா எனக்கு டைம் ஆகுது நான் பூ கொடுக்க போகணும் என்று கிளம்பி விடுகிறார்.
முத்து சவாரியை முடித்துவிட்டு பார்க்கிங்குக்கு வருகிறார். அங்கு இருக்கும் சிலர் செல்வம் குடுத்திருப்பதாக சொல்ல அவன் பகல்ல குடிக்க மாட்டானே என்று சொல்லுகிறார் முத்து.
செல்வம் எதற்காக குடித்தான்? முத்துவிடம் சொன்னது என்ன? அதற்கு மீனா சொல்லப்போக முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.