மீனாவிற்கு முத்து சுத்தி போட்டதை பார்த்து விஜயா கடுப்பாகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பரதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மீனா அவருக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகிறார். பிறகு விஜயா எல்லோரும் போய் சாப்பிட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறார். பரதம் கத்துக்க வந்த காதல் ஜோடிகள் சாப்பாடை மாறி மாறி ஊட்டி கொஞ்சிக் கொள்கின்றனர். மீனாவை சாப்பாடு எடுத்து வை என்று சொல்ல எனக்கு வேலை இருக்கு என்று சொல்லுகிறார். பார்வதி நம்மளே போட்டுக்கலாம் என்று சொல்ல அவளே போட்டுட்டு போகட்டும் பிளேட் எடுத்துட்டு வா என்று மீனா விடம் சொல்கிறார். மீனா பிரியாணியை எடுத்து வந்து கொடுக்க ஏன் வீட்ல சமைக்கலையா என்று விஜயா கேட்க, இல்ல அத்தை பூ கட்ட நேரம் ஆயிடுச்சு அதுதான் என்று சொல்லி சமாளிக்கிறார். சீக்கிரம் போய் வேலையை முடிச்சிட்டு நைட்டாவது வீட்ல சமைத்து வை என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பரதநாட்டியம் கத்துக்க வந்த காதல் ஜோடிகள் மாறி மாறி ஊட்டி கொள்வதை பார்த்து விடுகிறார் மீனா. மறுபக்கம் முத்துவிடம் போலீஸ் பேப்பரை காட்டு என்று நிற்க வைக்க, அந்த நேரம் பார்த்து சத்தியா வண்டியில் வர அவரையும் நிக்க வைக்கின்றனர்.
சத்யாவின் பைக்கில் சரக்கு பாட்டில்கள் இருப்பதை பார்த்த போலீஸ் என்னடா இது இப்படி எடுத்துட்டு போற என்று சொல்ல குடிச்சிட்டு தான் ஓட்டக்கூடாது, வாங்கிட்டு கூடவா போகக்கூடாது என்று ரூல்ஸ் எல்லாம் பேசுகிறார். குடிச்சிருக்கியா என்று கேட்க வேணாம் மீட்டர் வச்சு செக் பண்ணிக்கோங்க, மத்தவங்கள வேணா செக் பண்ணுங்க குடிச்சிருப்பாங்க என்று முத்துவை பற்றி பேசுகிறார். ஒருவருக்கொருவர் மாறி மாறி பேசிக்கொள்ள போலீஸ்காரர் ஒன்றும் தெரியாமல் முழிக்கிறார். பிறகு முத்துவிடம் என்னப்பா பேச்சுக்கு பேச்சு பேசுறான் தெரிஞ்ச பையனா என்று கேட்க முன்னாடி தெரிந்த பையன் என்று சொல்லுகிறார்.
வீட்டுக்கு வந்த விஜயா நெஞ்செரிச்சல் என்று சொல்ல, அவருக்கு சீரகத் தண்ணீர் போட்டுக் கொடுக்கிறார் ரோகினி. முத்து ,மீனா வர பிரியாணி சாப்பிட்டு விஷயத்தை சொல்லுகிறார். அண்ணாமலை மீனாதான் காய்கறி, கீரை, எல்லாம் செஞ்சு இருந்தாலே அது சாப்பிட்டா என்ன உனக்கு அவ லேட்டா வந்தாலும் கோபப்பட்டுட்டியா என்று கேட்க அப்படி எல்லாம் இல்லாத பிரியாணி வாங்கிட்டு வந்தா என்று விஜயா சொல்கிறார்.
உடனே ரோகினி அப்போ வீட்ல இருந்து எடுத்துட்டு போன சாப்பாடு என்ன பண்றீங்க என்று கேட்க விஜயா என்ன பண்ணி இருப்பா அவங்க வீட்ல போய் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டு இருப்பா சொல்லுகிறார்.
உடனே முத்து ஆமா இது பெரிய தானிய களஞ்சியம் இங்கிருந்து எங்க மாமியார் வீட்டில் வாங்கி சாப்பிடணும்னு அவசியமே கிடையாது என்று சொல்லுகிறார். அப்ப என்ன பண்ணா கேளு என்று சொல்ல என்ன ஆச்சு மீனா சொல்லு என்று சொல்ல மீனா நடந்த விஷயங்களை சொல்லுகிறார். செருப்பு தைக்கறவங்க பசியும், மயக்கத்துல இருந்தவங்க அவங்களுக்கு கொடுத்துட்டேன் என்று சொல்கிறார். நல்ல விஷயம் தானே பண்ணியிருக்க இதுக்கு ஏன் தயங்குற என்று சொல்ல அண்ணாமலையும் சாப்பாடு தானும் கொடுக்கிறது ரொம்ப பெரிய புண்ணியம் என்று சொல்லுகிறார்.
ஆனால் விஜயா யார் வீட்டு சாப்பாடு யார் சாப்பிடுறது எனக்கு கொண்டு வந்தது அங்க குடுத்துட்டு எனக்கு கடையில வாங்கிட்டு வந்து இருக்கா, என்று கோபப்படுகிறார். அண்ணாமலை மீனா நம்மளோட குடும்பத்துக்கு தான் புண்ணியம் சேர்த்து இருக்கா என்று சொல்ல கரெக்டுப்பா என்று உடனே கிச்சனுக்கு ஓடிய முத்து கையில் உப்பு கொண்டு வந்து மீனாவுக்கு சுத்தி போட்டு துப்ப சொல்கிறார், உடனே விஜயா துப்பு துப்பு ஒரு நாளைக்கு ஊரே துப்ப போகுது என்று நினைத்து விட்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.
மனோஜ் தூங்காமல் அந்த லெட்டரை எடுத்து மீண்டும் படித்துப் பார்க்க என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். அம்மாவிற்கு ஃபோன் போடலாம் என்று வெளியே வருகிறார்.
நடந்த விஷயங்களை விஜயாவிடம் சொல்ல, விஜயா என்ன சொல்லுகிறார்? அதற்கு மனோஜ் சொன்ன பதில் என்ன? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.