சீதா டிகிரி பாஸ் பண்ணதை நினைத்து முத்து மீனா சந்தோஷப்படுகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இன்றைய சீரியலில் எபிசோட்டில் சீதாவை நினைத்து சந்தோஷப்பட அண்ணாமலையிடம் வந்து சொல்ல அவரும் சந்தோஷபடுகிறார்.பிறகு விஜயாவிடம் சொல்ல நக்கலாக பேசுகிறார்.பிறகு முத்து தண்ணீர் கொடுத்து வயிறு எரியும் குடிங்க என்று பல்பு கொடுக்கிறார்.
ரோகிணியிடம் சொல்ல நல்ல விஷயம் தான் என்று சொல்லுகிறார்.ஆனால் மனோஜ் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்கிறார். ஆனால் முத்து அவரையும் ஆஃப் செய்கிறார்.
ரவி ,ஸ்ருதியும் வர இந்த விஷயத்தை கேட்டு சந்தோஷபடுகிறன.ஸ்ருதி ரவியிடம் பிரியாணி கேட்க அதெல்லாம் எதுக்கு என்று விஜயா சொல்ல ஸ்ருதியிடம் பல்பு வாங்குகிறார்.
பிறகு மீனாவின் அம்மா போன் போட்டு கோவிலுக்கு வர சொல்ல முத்து, மீனா கிளம்பி செல்கின்றன.பிறகு எல்லோரும் சந்தோஷமாக இருக்க சீதா அப்பாவை நினைத்து அழுகிறார்.
முத்து மீனா வாழ்த்து சொல்லி ஸ்வீட் கொடுக்கின்றது. சீதா மீனாவிற்கு நன்றி சொல்லி அழ மீனா ஆறுதல் கூறுகிறார். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்கின்றன.
பிறகு டிகிரி கோட்டை சீதா மீனாவிற்கு போட்டுவிட எல்லோரும் கைத்தட்டி சந்தோஷப்படுகின்றன. சீதாவை வைத்து சத்யாவை ஜாடையாக பேசிவிட்டு முத்து கிளம்பி சொல்ல சத்தியா கோபப்படுகிறார்.
மனோஜ் கடைக்கு வந்த பேங்க் நபரை பார்த்து சந்தோஷப்படுகிறார். கடைக்கு வந்த பேங்க் நபர் யார்? மனோஜ் இதற்கு சந்தோஷப்படுகிறார்?என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.