விஜயா கொடுத்த ஷாக்கால் ரோகினி முடி ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று எபிசோட்டில் முத்து மீனா கிருஷ்யை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக சொல்ல விஜயா கோபப்படுகிறார். அவ அம்மாவே விட்டுட்டு போயிட்டா உங்களுக்கு என்ன அக்கறை என்று கேட்க மீனா அதுக்கு தான் கோவிலில் சீட்டு போட்டு பார்த்தோம் அதில் தத்து எடுக்க வேணாம்னு வந்துடுச்சு என்ற உண்மையை சொல்லி விடுகிறார்.
ரோகினிடம் விஜயா நடந்ததை சொல்ல மனோஜ் ஆமென் ஏதாவது திருடிவிட்டு போயிட்டா என்ன பண்ணுவேன் என்று சொல்ல எல்லாரும் உன்ன மாதிரி எந்திருவார்களா என்று முத்து கொடுக்கிறார். பிறகு முத்து நீங்க சொல்றதெல்லாம் கேட்க முடியாது எங்க அப்பா சொல்றது மட்டும்தான் கேட்பேன் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார்.
இது குறித்து பேசி அண்ணாமலை அவன் நல்ல விஷயம்தான் செய்கிறான் அதிலும் அவங்க பாட்டியோட சம்மதமும் அந்த பையனோட விருப்பமும் ரொம்ப முக்கியம். என்ன நடக்குது என்று பார்க்கலாம் என்று அவரது முடிவை சொல்கிறார்.
ரோகினி அவங்க அம்மாவிற்கு ஃபோன் போட்டு நடந்த விஷயத்தை சொல்லி கோபப்படுகிறார். பிறகு முத்து மீனாவிடம் சொல்லி போன் பண்ண ரோகினி அம்மா ஃபோன் எடுக்கலாம் இருக்காமல் இருக்கிறார். மீனா கொஞ்சம் பொறுமையாகவே இந்த முடிவை எடுக்கலாம் என்று முத்துவிடம் சொல்ல உன் பொண்டாட்டிக்கு எவ்வளவு அறிவு என்று கொஞ்சுகிறார்.
ரோகிணி தன் தோழியை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி கிருஷ், அம்மாவையும் சென்னையில் தங்க வைக்க போவதாக சொல்லுகிறார். பிறகு எத்தனை நாளைக்கு இது மறைக்க முடியும் என்று சொல்ல எனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும். அது நடந்தால் மீதியை நான் சமாளித்து விடுவேன் என்று ரோகினி கூறுகிறார்.
மேலும் மீனாவின் தங்கை போன் போட்டு குட் நியூஸ் என சொல்ல, மீனா கண்கலங்குகிறார். சீதா சொன்ன குட் நியூஸ் என்ன? மீனா சொன்ன வார்த்தை என்ன? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.