மனோஜிடம் சிக்கியுள்ளார் ரோகினி.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து ஒருவரை ஏற்றிக் கொண்டு சவாரி வந்து கொண்டிருக்கிறார். வரும் வழியில் அவருக்கு சீக்கிரமாக வா என்று போன் வருகிறது. அதற்கு முத்துவிடம் இன்னும் எவ்வளவு நேரத்தில் போயிடலாம் என்று கேட்க பத்து நிமிஷத்துல போயிடலாம் சார் என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்டதற்கு பொண்ணு பார்க்க போவதாக சொல்லுகிறார்.
ஒரே குழப்பமா இருக்கு பிரதர் கல்யாணம் பண்ணலாமா வேணாமா என்று சொல்ல முத்து பண்ணுங்க என்று சொல்லுகிறார் மீண்டும் வேண்டாம் என்பது போல சொல்ல அவர் கன்பியுசன் ஆகிறார். பொண்ணுங்க மகாலட்சுமி மாதிரியே இருப்பாங்க பேய் மாதிரி இருப்பாங்க அவங்க அவங்களுக்கு கிடைக்குற மாதிரி தான் சார் என்று குழப்ப அவர் மீண்டும் குழம்புகிறார். உங்களுக்கு எப்படிப்பட்ட ஒய்ஃப் என்று கேட்க பாதி மகாலட்சுமி பாதி பேய் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து முத்துவுக்கு போன் வர அவர் வண்டியை திருப்பும் போது கூட்டியில் மோதி விடுகிறார்.
யார் என்று பார்க்கும் போது மீனா, இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கின்றனர். ஒரு போலீஸ் வந்து ஏன்டா அவங்க மேல இடிச்ச என்று கேட்க மீனா எதுக்கு அவர வாடா போடான்னு சொல்றீங்க என்று போலீஸிடம் கேட்கிறார். நாங்க பாத்துக்கிறோம் நான் உங்கள கூப்பிட்டேனா என்று கேட்டு போலீஸ் அனுப்பி விடுகிறார். பிறகு அடிபட்டுச்சா மீனா என்று கேட்க இப்ப வந்து கேளுங்க என்று கோபப்பட இவங்க தான் வைஃபா என்று சவாரிக்கு வந்த நபர் ஷாக் ஆகிறார். பேய் ஆட்டம் ஆடுவார்கள் என்று சொன்னீர்களே கரெக்டு தான் என்று சொல்ல மீனா கோபப்பட்டு சொல்கிறார். முத்து என் பிரதர் இப்படி போட்டு கொடுத்துட்டீங்க என்று கேட்கிறார்.
மறுபக்கம் ரோகினியின் அம்மா ஹாஸ்பிடலில் இருக்க, அவருக்கு கூட இருக்க ஒரு ஆளை ரெடி பண்ணி விடுகிறார் ரோகினி. மனோஜ் போன் பண்ணி எங்க போய் இருக்கா ரோகினி கால்ல சீக்கிரமா போயிட்டு சொன்னாங்க எங்க போனா என்று கேட்க, வித்யாவுடன் வெளியே வந்துள்ளதாக சொல்ல அந்த நேரம் பார்த்து வித்யா ஷோரூம் வருகிறார். வித்யாவை பார்த்து மனோஜ் மறுபடியும் நீ வித்யா கூட தான் இருக்கியா என்று கேட்கிறார் ஆமாம் என்று சொல்லிவிட்டு ரோகினி போனை வைத்துவிட்டு உடனே வித்யாவிற்கு ஃபோன் பண்ணி சொல்ல நான் ஷோரூம்ல தான் இருக்கேன் என்று அவர் சொல்ல அதிர்ச்சியில் இருக்கிறார் ரோகினி. மனோஜ் குழம்பு போய் நிற்கிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு ஒருவர் வந்து முதலாளி அம்மா என்று கூப்பிட விஜயா வருகிறார். மீனா முதலாளி எங்க இருக்காங்க என்று கேட்க மீனாவை கூப்பிட்டு என்ன இதெல்லாம் இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்கியா என்று திட்ட நான் எதுவும் சொல்லல என்று நீங்க யாரு என்று கேட்க,அந்த நபர் மீனாவை முதலாளியம்மா என்று கூப்பிட விஜயா என்னும் கடுப்பாகிறார்.
அந்த நபர் எதற்கு வந்தார்? மீனாவின் கோபம் குறைந்ததா? முத்து என்ன செய்யப் போகிறார். என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.