முத்து ஷாக் கொடுக்க, ரோகினி பயத்தில் இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மனோஜ், முத்து தான் லெட்டர் எழுதியதாக அவர் மீது பழியை போட அவர் போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்று கூப்பிடுகிறார். உடனே மனோஜும் கிளம்ப ரோகினி வேண்டாம் பிசினஸ் பாதிக்கும் இதுக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனை வந்தா பாத்துக்கலாம் என்று சமாளிக்கிறார்.
உடனே அனைவரும் கிளம்ப முத்து பார்லர் அம்மா நைசா முடிச்சு வெச்சுடுச்சு, எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு என்று சொல்ல அதற்கு மீனா நீங்க இல்லன்னு சொல்லிட்டாங்க இல்ல விடுங்க என்று சொல்ல அப்படி எல்லாம் விட முடியாது என் மேல பழி போட்டு இருக்காங்க நான் இதை கண்டுபிடிச்சே தீருவேன் என்று முத்து சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு வெளியான ப்ரோமோவில் அனைவரும் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருக்க முத்து வந்து மனோஜிடம் ஏதோ மொட்டை கடுதாசி போட்டதற்கு காரணம் நான் தான் என்று பழிபோட்டல்ல என்று சொன்ன அதற்கு மனோஜ் காரணம் எல்லாம் இல்லை நீதான் என்று மறுபடியும் உறுதியாக சொல்லுகிறார் மனோஜ். அடி வாங்காமல் தப்பிச்சிட்ட இல்ல அதனால தான் இப்படி பேசுற என்று சொன்னவுடன் அது யாருன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன் என்று முத்து சொல்லுகிறார். இதனால் ரோகிணி பயத்தின் உச்சியில் இருக்கிறார். முத்து கண்டுபிடித்தது உண்மையா ரோகினியின் உண்மை தெரியுமா என்று பரபரப்பான திருப்பங்களுடன் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.