பல வருடங்களுக்கு முன்பே விஜய் டிவியில் நிகழ்ச்சியில் இருந்து உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா.
இந்த சீரியலில் முத்து, மீனா ஜோடிக்காக தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.இது மட்டுமில்லாமல் சமீபத்தில் நடந்த விஜய் டிவியில் விருது விழாவில் சிறந்த நாயகன்,நாயகி விருதை இவர்கள் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பதற்கு முன்னரே விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் மீனா. தற்போது அந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.