கிருஷ்யை பார்க்க வந்த முத்து, மீனாவை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார் ரோகினி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வாங்கி கொடுத்த புடவையை மீனா கட்டிக்கொண்டு மாறி மாறி செல்பி எடுத்து சந்தோஷப்படுகின்றன. இன்னொரு துணி கவர் இருப்பதை பார்த்த மீனா அதுவும் எனக்கு புடவையா என்று கேட்க அது குழந்தைக்கு என்று சொல்கிறார் முத்து. நம்ம குழந்தைக்கா என்று மீனா வெட்கப்பட அதெல்லாம் ஒன்னும் இல்ல கிருஷ்க்காக என்று சொல்கிறார் முத்து. கிரிஷ்ஐ சந்தித்து துணியை கொடுக்க முத்து மீனா முடிவெடுக்கின்றனர்.
மறுபக்கம் ஸ்ருதியின் அம்மா ரெஸ்டாரன்ட் வந்து ரவியை சந்தித்து ரெஸ்டாரன்ட் திறப்பதற்கும், குழந்தை பெத்துக்கவும் என்ன சம்பந்தம் இருக்கு, என்று சொல்லி ரவியிடம் பிளாங்க் செக்கை கொடுத்து புது ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்ண சொல்லுகிறார். ஆனால் ரவி வாங்க மறுத்தும் ஸ்ருதியின் அம்மா வற்புறுத்தி ரவையிடம் செக்கை கொடுத்துவிட்டு கிளம்பி விடுகிறார். ஆனால் ரவிக்கு செக் வாங்க விருப்பமில்லாததால் ஸ்ருதியின் டப்பிங் ஸ்டூடியோ விற்கு வந்து போன் செய்கிறார்.
ஸ்ருதி வெளியே வராததால் ரவி கோவமாக ஸ்ருதியிடம் வந்து செக்கை வீசி எறிந்து விட்டு வேகமாக வெளியேறுகிறார். இதனால் ஸ்ருதி ரவிக்குடைய வாக்குவாதம் ஏற்படுகிறது. ரவியிடம் கோபமாக பேசிவிட்டு உள்ளே சென்றார் ஸ்ருதி.
ரோகிணியை எதிர்பார்த்து கிரிஷ் வாசலில் வந்து நிற்க, அம்மா வரலைன்னா எனக்கு பிறந்த நாள் தேவையில்லை என்று சொல்லும் போது ரோகிணி கிருஷ் என்று கூப்பிடுகிறார். சந்தோஷத்தில் க்ரிஷ் ஓடிவந்து ரோகிணியை கண்டுபிடித்துக் கொள்கிறான். தன் நண்பர்களிடம் நீ தான் என்னோட அம்மானு சொல்லப் போறேன் என்று கிரிஷ் சொல்ல, ரோகிணி வேண்டாம் என சொல்கிறார். க்ரிஷ் சரி சொல்லவில்லை என்று சொல்ல கிருஷ்க்கு வாங்கிய துணியை எடுத்து கொடுக்கிறார் ரோகினி. உண்மையை சொல்லிவிடு என்று ரோகினில் அம்மா சொல்ல கோபமாக பேசி சமாளித்து விடுகிறார்.
கிரிஷ் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்துவிட சந்தோஷமாக இருக்கின்றன.
திடீரென முத்து,மீனா காரில் வந்து இறங்க ரோகிணி பார்த்து ஷாக்காகி கிச்சனில் மறைந்து கொள்கிறார்.
முத்து மீனாவிடம் ரோகிணியின் அம்மா உண்மையை சொல்வாரா? முத்துவிடம் ரோகிணி சிக்குவாரா ? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.