ஸ்ருதியின் அம்மா மீனாவை திட்டியதால் கோபத்தில் உள்ளார் முத்து.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ஸ்ருதியின் அம்மாவிடம் பெரியவங்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து நடந்துக்க சொல்லுங்க என்று சொல்ல ஸ்ருதி மேல உங்களுக்கு இல்லாத உரிமையா நீங்களே சொல்லுங்க என்னால சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். இதனால் விஜயா கடுப்பாகிறார். உடனே ரோகினிக்கு அம்மாவிடம் இருந்து போன் வர எடுத்துப் பேசுகிறார். பிறகு ஹாஸ்பிடல் உங்க அம்மாவை சேர்த்து இருக்கும் சீக்கிரம் வாங்க என்று நர்ஸ் பேசுகிறார். இதனால் பதற்றம் அடைந்த ரோகினி அங்கிருந்து உடனே கிளம்புகிறார்.
பிறகு டான்ஸ் கிளாஸ் மாணவர்கள் எல்லாம் வந்துவிட அந்த இருவர் மட்டும் வராமல் இருக்கின்றன விஜயா கூப்பிட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் மேலிருந்து இறங்கி வருகின்றனர். நீங்க ரெண்டு பேரும் மட்டும் மேல இருந்து வரீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க மாடில பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்தோம் என்று சொல்லுகின்றனர்.
ஸ்ருதியின் அம்மா வரும் வழியில் மீனாவை பார்க்க மீனாவிடம் என் பொண்ணு வாழ்க்கையை கெடுக்க பாக்குறியா என்று சண்டை போடுகிறார். பணம் தான் முக்கியம்னா சொல்லு எவ்வளவு தரேன் ஆனா என் பொண்ணு வாழ்க்கையை கெடுக்காத என்று பேச மீனாவும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
அந்த நேரம் பார்த்து முத்து காரில் வந்து இறங்க பல குரல் அம்மா எதுக்கு வந்துட்டு போறாங்க என்றும் மீனாவிடம் கேட்க அதற்கு பூ வாங்க என்று சொல்லுகிறார் ஆனால் அவங்க கார்ல ஏறும் போது கைல பூ இல்லையே என்ற முத்து கேட்க சும்மா என்ன பார்த்துட்டு பேசிட்டு போகலாம்னு வந்தாங்க என்று சொல்கிறார் ஆனால் கடைக்கார பெண் நடந்த விஷயங்களை சொல்ல முத்து கோபமாக மீனாவை கூப்பிட்டுக் கொண்டு கிளம்புகிறார். மறுபக்கம் விஜயா ஸ்ருதியின் அம்மாவிடம் கொளுத்தி போட்டது வேலைக்காகுமா என்று யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரவி மற்றும் ஸ்ருதி வருகின்றனர். விஜயா என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க என்று கேட்க, அதுக்கு கூட டைம் இருக்கா என்ன என்று சரி கேட்டு நான் நார்மலாக தான் கேட்டேன் என்று விஜயா சொல்கிறார். உன்னுடன் தனியாக பேச வேண்டும் ரவி என்று கூப்பிட ஸ்ருதி எனக்கு தலை வலிக்குது நான் போறேன்னு பேசிட்டு வா என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
ரவியிடம் பேசத் தொடங்க முத்துவுமே கோபமாக வீட்டுக்குள்ள வந்த இந்த வீட்ல எது நடந்தாலும் நாங்க தான் காரணமா என்று நபியிடம் கேட்டு பல குரல் எங்க என்று கேட்கிறார் எதுக்கு இப்ப கோபப்படுற என்ன ஆச்சு என்று கேட்டேன்.ரூமில் நாலு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க விஜயா சந்தோஷப்படுகிறார்.
ஸ்ருதி மீனாவிடம் என்ன சொன்னார்? அதற்கு மீனாவின் பதில் என்ன?என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.