சீதாவுக்கு அதிர்ச்சி காத்திருக்க, விஜயாவை அலற விட்டுள்ளார் ஸ்ருதி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா சீதாவை வந்து சந்தித்து பேசுகிறார். நடந்த விஷயங்களை சொல்லி இனிமேல் ரோகினி விஷயத்தில் எதுவும் தலையிடக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்ப உடனே சீதாவிற்கு ஃபோன் வருகிறது. HR கூப்பிடுகிறார் என்று சொல்கின்றன. பிறகு ஓடி வந்த சீதா எதுக்காக க்ளைன்ட் டீடைல்ஸ் கொடுக்குறீங்க என்று கோபமாக பேசி உனக்கு வேலை இல்லை என்று சொல்லி விடுகிறார்.
ஆனால் சீதா கெஞ்சி கேட்டு இனிமேல் பண்ண மாட்டேன் சார், என்று சொன்ன பிறகு பாதி சம்பளம்தான் இந்த மாசம் என்று சொல்லிவிட,சீதா வருத்தம் அடைகிறார்.
மீனாவுடன் பூ கட்டுபவர்கள் வீட்டின் வெளியே வந்து மீனாவிற்கு ஃபோன் போட்டு கீழே வா மீனா என்று கூப்பிட கீழே வந்த மீனா என்னாச்சு அக்கா என்ன என்று கேட்கிறார் ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கு நைட் ஃபுல்லா மாலை பூ கட்டணும் போலாமா என்று கேட்க இல்ல அக்கா வீட்டுக்காரர் சாப்பாடு போடணும் இல்லனா சரியா சாப்பிட மாட்டார் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டே போக அங்கு இருப்பவர்கள் கிண்டல் செய்கின்றனர். பேசிவிட்டு உள்ளே கிளம்ப அந்த நேரம் பார்த்து முத்து போன் போடுகிறார்.
நைட்டு வீட்டுக்கு வர மாட்டேன் வேலூருக்கு சவாரி போகிறேன் என்று சொன்ன எங்க ,எப்போ, எங்க சாப்பிடுவீங்க, என்று லிஸ்ட் போட்டுக் கொண்டே போக முத்து நான் பாவம் மீனா நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி போனை வைக்கிறார். மீனா பூ கட்டுபவர்களுக்கு போன் போட்டு நான் வரேன் என்று சொல்ல வேறு ஒரு ஆளுக்கு சொல்லி விட்டதாக சொல்லி விடுகின்றனர்.
ஸ்ருதி வீட்டுக்கு வரும்போது ரவிக்கு போன் பண்ண ரவி நான் மிட்நைட்க்கு மேல தான் வருவேன் என்று சொல்ல ஸ்ருதி நான் கதவு திறக்க மாட்டேன் தூங்கிடுவேன் என்று சொல்லுகிறார். உடனே மீனாவிற்கு ஃபோன் அடித்து ஸ்ருதி கதவு திறக்க மாட்டேன்னு சொல்றானா போன் பண்ணும் போது கதவை மட்டும் திறந்து விடுங்கள் என்று சொல்லுகிறார்.
ஸ்ருதி கிச்சனுக்கு வர முத்துவும் வெளியே சென்று இருக்க விஷயத்தை மீனா சொல்லுகிறார். உடனே ஸ்ருதி இரண்டு பேரும் நைட்டு பேய் படம் பார்க்கலாம் என்று சொல்லுகிறார். ஆனால் மீனா பேய் படம் பார்த்து பயந்து பயந்து கத்துகிறார். சத்தம் கேட்டு வந்த விஜயா எதுக்கு இப்ப கத்துக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க பேய் படம் பார்த்த பயமா தானே இருக்கும் என்று ஸ்ருதி கேட்கிறார்.
அப்போ உங்களுக்கு பயம் இருக்காதா என்று கேட்க நான் பேய் வந்தா லெப்ட்லயே ஒன்னு விடுவேன் என்று விஜயா சொல்கிறார்.
ஸ்ருதி விஜயாவை பயமுறுத்த பிளான் போடுகிறார்? அவர் என்ன பிளான் போட்டார அதற்கு விஜயா பயந்தாரா? இல்லையா?என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.