மனோஜ் ஓவராக பில்டப் கொடுத்து பேசி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் சுருதி, விஜயா மற்றும் ரவி மாதிரி பேசி அசத்துகிறார். மீனா கண்ணை கட்டிக்கொண்டு பூ கட்ட முத்து பயங்கரமாக என்கரேஜ் செய்கிறார். முதல் போட்டி முடிய இரண்டாவது போட்டி தொடங்குகிறது.
முதலில் மனோஜ் மற்றும் ரோகினி விளையாட, மனோஜ் ரோகினி என்னிடம் எதையும் மறைப்பதில்லை என்றும், ரிலேஷன்ஷிப்பில் டிரஸ்ட் ரொம்ப முக்கியம் என்றும் பேச ரோகினி குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். பிறகு கண்கலங்கி நீ என் மீது இவ்வளவு பாசமாயிருக்கிறாய் என்று இப்போ தான் தெரிகிறது என்று சொல்கிறார்.
அடுத்ததாக ஸ்ருதி மற்றும் ரவி பேச தொடங்க ரவி, ஸ்ருதி என் வாழ்க்கையில் கிடைத்தது மிகப்பெரிய கிஃப்ட்.என்னை காதலித்து பெற்றோருக்கு எதிராக நின்று தைரியமாக என்னை திருமணம் செய்து கொண்டார். நியாயத்தின் பக்கமே எப்போதும் சுருதி இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எங்க அப்பாவுக்கு மூன்று குழந்தைகள் அதேபோல் எங்களுக்கும் மூன்று குழந்தை பிறக்கும் என ஆசைப்படுகிறேன் என்று சொல்ல சுருதி கோவமாக என்னால் சம்மதிக்க முடியாது என்று சொல்லி எழுந்து வந்து விடுகின்றன.
மூன்றாவதாக முத்து,மீனா பேசும்போது நான் பேசுகிறேன் என்று மீனா சொல்லி ஆரம்பிக்கிறார். என் அப்பா இறந்து விட்டார் ஆனால் அவர் எப்படி பார்த்துக் கொள்வாரோ அதேபோல் இவர் பார்த்துக் கொள்கிறார் அம்மாவின் அரவணைப்பு எப்படி இருக்குமோ அதை நான் இவரிடம் உணர்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் என் கணவர் மட்டும் எனக்கு போதும் என்று கண்கலங்கி பேசுகிறார். அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
மூன்றாவது போட்டியாக கேள்விக்கு பதில் என்ற போட்டி தொடங்குகிறது.அதில் சம்பளம் குறித்த கேள்வி கேட்டபோது ஸ்ருதி எனக்கு ரவியின் சம்பளம் தெரியாது. ரவிக்கு என்னோட சம்பளம் எவ்வளவு என்று தெரியாது. ஆனால் குடும்பத்துக்கு நாங்க ஷேர் பண்ணி கொடுத்துடுவோம் என்று சொல்கிறார்.
மனோஜிடம் கேட்க ஓவர் பில்டப் கொடுத்து கேள்வியே தப்பு என்று சொல்லுகிறார்.விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லன்னா விடுங்க என்று சொல்லிவிடுகின்றன. பிறகு சொல்லுகிறேன் என்று அவருடைய சம்பளத்தை சொல்லுகிறார். ரோகினியிடம் கேட்க 50 ஆயிரம் சம்பாதிப்பேன் 25,000 என் செலவுக்கு எடுத்துக் கொள்வேன் என்று சொல்கிறார்.
மீனாவின் சம்பளம் குறித்து முத்து என்ன சொல்கிறார்? முத்துவின் சம்பளம் குறித்து மீனா என்ன பேசுகிறார்?என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.