மீனா முடிவு ஒன்றை எடுக்க சந்தோஷத்தில் உள்ளார் விஜயா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் ரோகினியின் அம்மாவை தனியாக அழைத்துக் சென்று முத்துவும் மீனாவும் விசாரிக்க அவர் கிரிஷ் குறித்த உண்மையை சொல்கிறார். உங்க பொண்ணிடம் பேச வேண்டும் என்று முத்து கேட்க ரோகினியின் அம்மா சமாளித்து விடுகிறார்.
பிறகு கிருஷ்க்கு கேக் வெட்ட வருகின்றன. ஆனால் க்ரிஷ் ரோகினியை பார்க்காமல் வருத்தப்படுகிறான். எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கேக் வெட்டி சந்தோஷப்படுகின்றன. க்ரிஷ் சோகமாக இருக்க முத்து அவனை முத்து சிரிக்க வைக்கிறார்.
முத்து மீனாவும் கிளம்பிய உடன் ரோகினி வீட்டுக்கு வர க்ரிஷ் கேக் கூட்டி விடுகிறான். ரோகினி உண்மையை சொன்னதற்காக அம்மாவிடம் பயங்கரமாக கோபமாக பேசி இதுக்கு மேல முத்துவும் மீனாவும் இங்கு வரவே கூடாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
காரில் வரும்போது கிருஷ்யை நினைத்து இருவரும் வருத்தப்பட்டு கொண்டு இருக்க மீனா தத்து எடுத்துக்கலாம் என்று சொல்கிறார். முத்துவும் ஓகே என்று சொல்ல குடும்பத்தார் என்ன சொல்வார்கள் என்று இருவரும் பேசிக் கொள்கின்றன.
மறுபக்கம் மீனா கோயிலுக்கு சென்று சீட் போட்டு பார்க்கலாம் என்று முடிவெடுக்கிறார், விஜயா தொடங்கிய நடன பள்ளியில் ஆட்கள் வந்து சேர்வதை பார்த்து சந்தோஷப்பட்டு நிற்கிறார்.
கோவிலுக்கு சீட்டு குலுக்கி போட்ட மீனாவுக்கு கிடைத்தது என்ன? விஜயாவுக்கு காத்திருக்கும் சிக்கல்? என்ன இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்