சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் யோகேஷ்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வெற்றி வசந்த் நாயகனாக நடிக்க கோமதி பிரியா நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் முத்துவின் தம்பியாக ரவி என்ற கதாபாத்திரத்தில் யோகேஷ் நடித்து வந்தார். திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ள தற்போது அவருக்கு பதிலாக நடிகர் பிரணவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நேற்றைய எபிசோடிலிருந்து நடிகர் பிரணவ் காட்சிகள் சீரியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.