மீண்டும் நாடகம் போட்டு அனைவரையும் ஏமாற்றியுள்ளார் ரோகினி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வழக்கம் போல ரோகிணி நாடகமாடி விஜயாவை நம்ப வைக்கிறார். இதை யார் சொன்னது என்ற கேள்வி ஆரம்பிக்க அண்ணாமலை முத்துவை பார்க்க, முத்து எனக்கு ரவிதான் சொன்னான் என்று சொல்கிறார். உடனே ரவி எனக்கு ஸ்ருதி சொன்னதாகவும், உடனே ஸ்ருதி எனக்கு எப்படி தெரியும் என்று கேட்காதீங்க எனக்கு மீனா சொன்னாங்க என்று சொல்லிவிடுகிறார்.
விஜயா மீனாவிடம் கோபமாக பேச, ரோகினி என்னோட பர்சனல் தலையிடறீங்களே உங்களுக்கு அசிங்கமா இல்லையா என்று கேட்கிறார். பிறகு அண்ணாமலை கூட்டுக் குடும்பம்னா அப்படித்தான் இருக்கும் எந்த விஷயத்தையும் மறைக்க முடியாது என்று பேசிவிட்டு கிளம்ப, முத்து மீனாவுக்கு ஆறுதல் சொல்கிறார், அதற்கு மீனா இருந்தாலும் எனக்கு ரோகினி மேல ஒரு சந்தேகம் இருக்கு அவங்க வாழ்க்கையில என்னமோ நடந்திருக்கு என்று தோன்றுகிறது என்று சொல்கிறார். அதற்கு முத்து வந்த பார்லரம்மா ஒரு பிராடு தான் எனக்கு தெரியுமே என்று சொல்கிறார். இதையெல்லாம் வெளியே இருந்து கேட்டு ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.
நேராக விஜயாவிடம் வந்து எனக்கு இங்கு பிரைவசி இல்லை நானும், மனோஜ் வீட்டை விட்டு போகிறோம் என்று சொல்ல, நீங்க ஏன் போகணும் அந்த பூ கற்றவள எப்படி இங்கிருந்து அனுப்பனும்னு எனக்கு தெரியும் நீ போ நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிடுகிறார். நீ மனோஜ், மற்றும் ஸ்ருதி ரவி மட்டும்தான் இந்த வீட்டில் இருக்கணும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மனோஜ் ரோகினியிடம் வந்து நடந்ததை பற்றி யோசிக்க வேண்டாம் என்று சொல்ல என்னை எல்லாரும் கஷ்டப்படுத்துறாங்க என்று பேசிக்கொள்கின்றனர்.
பிறகு மனோஜ் குழந்தை பற்றிய ஆசை ஆசையாக பேசிக்கொள்ள ரோகிணி குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். மனோஜ் என்ன பேசினார் அதற்கு ரோகினியின் பதில் என்ன என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.