செல்வம் அட்வைஸ் கொடுக்க, முத்துவின் கோபத்தை குறைக்கும் மீனா ஒரு முடிவெடுத்துள்ளார்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் காலம் பார்த்து முத்துவிற்கு சவாரி வந்து விடுகிறது. நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
பிறகு ஒரு பள்ளியில் இருந்து இரண்டு பேர் வந்து நோட்டீஸ் கொடுக்க பள்ளியை பற்றி விசாரித்து வைத்துக் கொள்கிறார் ரோகினி. மறுபக்கம் மீனா பூ கட்டுபவர்களிடம் பேசிக் கொண்டிருக்க உன் மேலேயும் தப்பு இருக்கு அண்ணா சொன்னது மீறி ஏன் செஞ்ச என்று கேட்கிறார்.
உனக்காக பூக்கடை வச்சு கொடுத்தாரு அதுபோல அதுக்கப்புறம் வண்டி வாங்கி அதுல பூ விக்க சொல்லியிருக்காரு என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனாவின் அம்மா போன் போடுகிறார்.
போனை எடுத்த மீனா எங்களுக்குள்ள சண்டை எல்லாம் முடிஞ்சிடுச்சு, நைட்டு சமாதானம் ஆகிவிட்டார் என்று சொல்ல ஏன் பொய் சொல்ற மீனா என்று நடந்த விஷயங்களை மீனாவிடம் சொல்கிறார். பூ கட்டுபவர்கள் மீனாவிற்கு முத்துவின் கோபத்தை குறைக்க ஐடியா சொல்லுகின்றனர்.
மறுபக்கம் முத்து சவாரிக்கு வர அங்கு ஏறிய ஒரு லேடி அழுது கொண்டே காரில் ஏறுகிறார். என்ன பிரச்சனை என்று முத்து முதலில் கேட்க அவர்கள் சொல்ல மறுக்கின்றன. பிறகு என்னோட அண்ணன் காய்ச்சலில் ஹாஸ்பிடலில் இருப்பதாகவும் ,என் புருஷனுக்கு அவர் கூட சண்ட அதனால போக கூடாதுன்னு சொல்லிட்டாரு எவ்வளவு கெஞ்சியும் அனுப்பல அதனால தெரியாம தான் போகிறேன் என்று சொல்ல முத்து மீனாவை நினைக்கிறார்.
தனியாக யோசித்து நின்று கொண்டிருக்கும் முத்துவிடம் வந்து அவரது நண்பர் செல்வம் அட்வைஸ் கொடுக்கிறார்.முத்து அதை ஏற்றுக் கொண்டாரா? மனம் மாறினாரா?என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.