மீனா சொன்ன வார்த்தைக்கு முத்து பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை செல்வத்தின் சொந்தக்காரர்கள் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்து தள்ளி விடுகின்றனர். முத்து இதை எல்லாம் பார்த்து அதிர்ச்சி ஆகி கோபப்பட மீனா அவரை தடுத்து நிறுத்துகிறார். செல்வத்தின் மனைவி மன்னிப்பு கேட்டு சாப்பிட கூப்பிட முத்துவும், மீனாவும் வேண்டாம் என கிளம்பி வருகின்றனர்.
வீட்டுக்கு இருவரும் வந்தவுடன் அண்ணாமலை ஃபங்ஷன் எப்படி போச்சுமா என்று கேட்க இவருக்கு ரொம்ப மரியாதை கொடுத்தாங்க மாமா அவங்க சொந்தக்காரர்கள் வந்து கட்டி முடிக்க புடிச்சு அணைச்சு அப்படி பாத்துக்கிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்குமா முன்னாடியே எல்லாம் இவன் போனா இவன திட்டுவாங்க ஆனா இப்போ இவனை பாராட்டுற அளவுக்கு இவன் மாறி இருக்கான் என்று அண்ணாமலை சொல்லுகிறார். ஆமாம் மாமா எந்த விஷயத்தையும் யோசித்து என்கிட்ட கேட்டுட்டு தான் முடிவு எடுப்பாரு என்று முத்துவை பற்றி பெருமையாக பேசி சமாளிக்கிறார். அண்ணாமலை கிளம்பியவுடன் முத்து கட்டிலில் உட்காருகிறார். அப்பா கிட்ட சொல்லாததுக்கு தேங்க்ஸ் என்று சொல்ல நான் எப்படி சொல்லுவேன். குத்தி காமிச்சு பேசுனதா நினைக்காதீங்க எனக்குள்ள இருக்குற ஆதங்கத்தை தான் பேசினேன் என்று சொல்லுகிறார் மீனா.
இது மாதிரி குடிச்சிட்டு பங்க்ஷன் வைக்க வேணான்னு தான் முதல்ல இருந்து நான் சொல்லிக்கிட்டு இருந்தேன். மத்தவங்கள பாத்துட்டு நம்மளும் பெரிசா பண்ணனும் நினைச்சா இப்படித்தான் ஆகும். அவரோட பொண்டாட்டி பொண்ணோட டியூஷன் காசு கேட்டா இல்லன்னு சொல்லி இருக்காரு ஆனா குடிக்க இவ்வளவு செலவு பண்ணி இருக்காரு அந்த பொண்ணோட படிப்புக்கு கொடுத்திருந்தால் கூட புண்ணியமா போயிருக்கும் என்று பேசிவிட்டு மீனா கிளம்புகிறார்.
மறுபக்கம் அந்தப் பிஏ க்ரிஷ் கிரிக்கெட் விளையாடும் இடத்தில் இருந்து கிருஷ் உடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கிறார். மனோஜ் ஷோரூமில் செக்யூரிட்டி முட்டை சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சியாகி நிற்கிறார். இதைப் பார்த்த ரோகினி அங்கு வர இப்பத்திக்கு முட்டை மட்டும் தான் போயிட்டு இருக்கு இன்னும் சிக்கன் மட்டன் எல்லாம் on the way la இருக்கு என்று சொல்கிறார் மனோஜ் இதெல்லாம் தெரிஞ்சு தானே நம்ம சம்மதிச்சோம் விடு என்று சொல்ல பேசாம இதையெல்லாம் நான் சாப்பிட்டு என் உடம்ப தேத்திடவா என்று சொல்ல நீ என்ன செக்யூரிட்டி வேலைக்கு அப்போ போற போய் வேலையை பாரு என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து பி ஏ ரோகினிக்கு ஒரு போட்டோவை அடுத்த ரோகினி உடனே போன் பண்ணுகிறார்.
போனை எடுத்த அவர் என்ன கல்யாணி உன் பையன் உன்ன மாதிரியே இருக்கான் என்று சொல்ல என் பையனை ஏதாவது பண்ணுனா அவ்வளவுதான் என்று சொல்லுகிறார் உன் புருஷனுக்கு ரெண்டு லெட்டர் வந்திருக்குமே என்று சொல்ல அத நான் தான் பண்ணேன் என்று சொல்லுகிறார். உனக்கு என்ன வேணும் என்று கேட்க இப்பதான் கரெக்ட்டா பேசி இருக்க நான் சொல்ற லொகேஷனுக்கு வா என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.
பிறகு கார் விடும் இடத்தில் முத்து நடந்த விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து செல்வம் வருகிறார். முத்துவிடம் அழுத்து என் மேல தான் தப்பு மீனா சிஸ்டர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை நான் இப்படி பண்ணி இருக்க கூடாது மத்தவங்க மாதிரி பெருசா பண்ணனும் நினைச்சது என்னோட தப்பு தான் என்று சொல்லி அழுகிறார்.
காரில் இருந்து ஒரு கவரை எடுத்து முத்துவிடம் கொடுக்க என்ன இது என்று கேட்கிறார். இது ஃபங்ஷன்ல வந்த மொழிக் கவர். நான் இதுல பிரிச்சு இன்னும் எவ்வளவு இருக்குனு கூட பாக்கல மீதியும் எப்படியாவது கொடுத்துடுறேன் என்று சொல்லி மன்னிப்பு கேட்டு கேட்கிறார். முத்து முதலில் வாங்க மறுக்க பிறகு வாங்கிக் கொள்கிறார்.
பணத்துடன் வீட்டுக்கு வந்த முத்து மீனாவிடம் என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்