முத்து சொன்னதை கேட்டு பதறி அடித்து ஓடியுள்ளார் விஜயா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினியிடம் நீதான் என்னோட பெஸ்ட் வைஃப் நம்ம தான் பெஸ்ட் கப்புல் என்று பேசிக் கொள்கின்றனர். பிறகு ரவி நம்ம போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று சொல்ல ஸ்ருதி வாக்கு வாதம் செய்கிறார். மறுபக்கம் முத்து கட்டிலில் அமர்ந்து பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் அந்த நேரம் பார்த்து மீனா வருகிறார்.
லட்சியத்தோடு இருப்பதும் உழைப்போடு இருப்பதும் என் வாழ்வில் நீ வந்த பிறகுதான் நடந்தது என்று மீனாவிடம் சொல்கிறார். “பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தால்” என்று பாட்டு பாடி மீனாவிடம் ரொமான்ஸ் செய்கிறார். ரூம் கட்டுவதைப் பற்றி பேசிவிட்டு இருவரும் டான்ஸ் ஆட அந்த நேரம் பார்த்து விஜயா வருகிறார்.
மறுநாள் மேஸ்திரியுடன் முத்துவர இடம் பார்க்க மேலே செல்கின்றன.வீடு எப்படி கட்ட வேண்டும் என்று பிளான் பண்ணிக் கொண்டிருக்க விஜயா மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். வீடு கட்ட 4 லட்சம் ஆகும் என்று மேஸ்திரி சொல்லுகிறார். நீங்க வீடு கட்ட ஆரம்பிங்க நாங்க ரெடி பண்றோம் என்று சொல்ல இல்லை கையில பணம் வச்சுட்டு சொல்லுங்க ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிடுகிறார். முத்துவும் சரி அப்படியே பண்ணி விடலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
விஜயா மறைந்து கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்த முத்து, நாலு லட்சத்திற்கு எங்கே போவது என்று மீனா கேட்க அப்பா கிட்ட சொல்லி அம்மாவோட நகை வாங்கி அடமானம் வைத்துவிடலாம் என்று சொல்கிறார். அடகு வைச்சும் காசு பத்தலைன்னா வித்துடுவோம் என்று சொல்ல விஜயா பதறி அடித்து ஓடுகிறார்.
மனோஜ் ரோகினி என்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே வர என்ன விஷயம் என்று எல்லோரும் கேட்க ரோகினிக்கு கிப்ட் வாங்கி வந்ததாக சொல்கிறார்.
மனோஜ் என்ன கிப்ட் வாங்கி வந்தார்? விஜயா என்ன சொல்லப் போகிறார்?என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.