பணத்துக்காக மனோஜிடம் ரோகினி சண்டை போட சுருதி ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வீட்டில் நடந்த விஷயங்களை டிரைவர்களிடம் வந்து சொல்லி புலம்ப குடிச்சிட்டு புலம்பிட்டாவது நாளைக்கு சமாதானமா இருப்பான் ஆனால் நீ கொடுக்கிற என வாக்கு கொடுத்துட்டு இப்ப கொடுக்கலைன்னா சொந்தக்காரங்க முன்னாடி ரொம்ப அசிங்கமா ஆயிடும் எப்படியாவது ரெடி பண்ணிடு என்று அங்கு இருப்பவர்கள் சொல்ல உங்ககிட்ட எவ்வளவு இருக்கு என்று கேட்க அவர்கள் கையில் இருக்கும் காசுகளை எடுத்து 6 ஆயிரம் தான் இருக்கு என்று முத்துவின் கையில் கொடுக்கின்றனர்.
மறுபக்கம் வித்யா ரோகினிக்கு போன் போட்டு அந்த ஹவுஸ் ஓனர் பணம் கேட்கிறார் என்று சொல்ல ரெண்டு நாள் டைம் கேட்டுட்டு தானே வந்தோம் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து இருக்கோமே என்று சொல்ல இல்லன்னா வேற ஆளுக்கு விட்டுவிடுவேன் என்று சொல்லுகிறார் நீ சீக்கிரமா பணம் ரெடி பண்ணு என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மனோஜ் வருகிறார். போனை சமாளித்து வைத்து விட்ட ரோகினி மனோஜிடம் என் பிரண்டு அர்ஜெண்டா ஒரு லட்ச ரூபா பணம் கேட்கிறாள். நான் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன் என்று சொல்ல, பணமா எதுக்கு நமக்கே நிறைய கமிட்மெண்ட் இருக்கு முத்துக்கு மாசம் 50,000 தரணும், அதனால என்னால தர முடியாது என்று மனோஜ் சொல்கிறார். உன் பிரண்ட் இல்ல என் பிரண்டுக்கே நான் தர மாட்டேன் என்று சொல்ல அப்போ ஜீவா நம்பி எப்படி அவ்ளோ காசு கொடுத்தன்னு ரோகினி கேட்கிறார். என்ன ரோகினி இப்படி எல்லாம் பேசுற என்று கேட்க அப்போ என்ன கெஞ்ச விட்டு பாக்குறியா என்று ரோகினி கோபப்பட உன் தேவைக்கு ஏதாவது வேணும்னா கேளு கொடுக்கிற உன் பிரண்டுக்கெல்லாம் கொடுக்க முடியாது என்று மனோஜ் உறுதியாக சொல்லிவிட ரோகினி கோபப்பட்டு உட்கார்ந்து விடுகிறார்.
மாடிக்கு வந்த ரவி மற்றும் மனோஜ் முத்துவிடம் என்னாச்சு நடந்துகிட்டு இருக்க, என்று கேட்க எல்லாம் பண பிரச்சினை தான் என்று சொல்ல வீடு கட்ட பணம் தேவைப்படுதா என்று கேட்க உடனே மனோஜ் நான் தான் சொன்னேனே அவனால வீடு கட்ட முடியாது என்று சொல்ல முத்து ஓடுகாளி வாயை மூடிட்டு கம்முனு இரு செங்கல் அடுக்கி வச்சிருக்கேன் பாரு தலையிலேயே அடிச்சேன் அவ்வளவுதான் கம்முனு இரு என்று சொல்லுகிறார்.
ரவி என்னாச்சி முத்து என்று கேட்க செல்வம் அவங்க அப்பா அம்மாவிற்கு அறுபதாம் கல்யாணம் செய்வதற்கு காசு இல்லன்னு சொன்னா நான் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன் ஆனா மீனா கொடுக்க மாட்டா உன்கிட்ட ஏதாவது காசு இருக்கா என்று ரவியிடம் கேட்க உடனே மனோஜ் காசெல்லாம் கொடுக்காத இதே பிரச்சினையே தான் ரோகினி என் பிரண்டுக்கு தேவைப்படுதுன்னு கேட்டா ஆனா நான் கொடுக்கல என்று சொல்லுகிறார். கிச்சனில் மூவரும் ஒன்றாக இருக்க சுருதி மீனாவிடம் என்னாச்சு மீனா ஏதோ மாதிரி இருக்கீங்க என்று சொல்ல வேலை முடிஞ்சிடுச்சு இல்ல டயர்டா இருக்கு என்று சொல்லி சமாளிக்கிறார். ரோகிணி ஸ்ருதியிடம் என் பிரண்டுக்கு அவசரமாக காசு தேவைப்படுது என்று கேட்கிறார். கீழே மீனாவும் ரோகிணியும் சுருதி இடம் மாத்தி மாத்தி வாக்குவாதம் செய்ய, மேலே மனோஜ் மற்றும் முத்து இருவரும் ரவியிடம் வாக்குவாதம் செய்கின்றன.
இருவரும் ஸ்ருதியிடம் நியாயம் கேட்க நீங்க சொல்றது சரிதா ரோகினி ஆனால் மீனா சொல்றது யோசிக்கும் போது அதுவும் கரெக்ட்டா தான் இருக்கு. என்று பேச மேல ரவியும் பிரண்டுனா உதவி பண்ணாம இருக்க முடியாது ஆனால் கடனா வாங்கி கொடுத்தா அவங்க திருப்பி தந்துருவாங்கன்னு நம்பிக்கை இருக்கும் என்று ஐடியா கொடுக்கிறார்.
எல்லோரும் ஒரு ஐடியா ஓகே என்று கிளம்ப யார் யார் என்னென்ன செய்யப் போகிறார்கள் என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.