கிருஷ் பாட்டி சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியாகியுள்ளார் ரோகினி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றும் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மாவிற்கு ஃபோன் போட்டு நலம் விசாரிக்கிறார். பிறகு முத்து,மீனா அங்கு வரும் விஷயத்தை சொல்லி, கிரிஷ்ஐ அவங்க கண்ணுல காட்டாத என்று சொல்லுகிறார். எப்படி முடியும் என்று கேட்க பக்கத்து தெருவுல நம்ம சொந்தக்கார வீடு இருக்குது இல்ல அங்க எடுத்துனு போய்விடு. முடிஞ்சா உங்களை இன்னொரு வாட்டி வர வேணாம்னு சொல்லி அனுப்பிவிடு என்று ரோகினி சொல்லுகிறார்.
மறுபக்கம் ரவி பர்ஃபி செய்ய மீனாவும் ஸ்ருதியும் டேஸ்ட் பார்த்து செமையா இருக்கு என்று சொல்லுகின்றனர். ரவி நீங்க கிருஷ் பாக்க போறீங்க இல்ல இதுவும் கொஞ்சம் எடுத்துட்டு போங்க என்று சொல்லுகிறார். உடனே விஜயா வர சுருதி உடனே மாறி உங்களுக்கு ஏன் நாங்க தரணும் என்று மீனா விடம் சண்டை போடுவது போல் பேசுகிறார்.
உடனே விஜயா இப்பதாமா நீ கரெக்டா பேசுற வெக்கிறவங்களை வைக்கிற இடத்துல வைக்கணும் என்று ஸ்ருதியிடம் சொல்கிறார். பிறகு ரவி கடலமிட்டாய் செஞ்சிருக்க டேஸ்ட் பண்ணி பாருங்க என்று சொல்ல சூப்பரா இருக்கு நானும் பார்வதி வீட்டுக்கு தான் போறேன் கொஞ்சம் குடு என்று சொல்ல ரவி பாக்சில் போட்டு கொடுக்கிறார்.
முத்துவும், மீனாவும் க்ரிஷ் வீட்டுக்கு வர, குழந்தை எங்கே என்று கேட்கின்றனர். எனக்கு உடம்பு சரியில்லை என்று சொந்தக்காரங்க வீட்டில் விட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். இப்ப கூட உங்க பொண்ணு வராதா என்று முத்து கோபப்பட, தத்தெடுக்கும் விஷயம் குறித்து கிருஷ் பாட்டியிடம் சொல்லுகின்றனர்.
முத்துவும், மீனாவும் நாங்க நல்லபடியா பார்த்துப்போம் எங்களுக்கு குழந்தை பிறந்தாலும் கிருஷ் எங்களுடைய முதல் குழந்தை என்று எவ்வளவு சொல்லியும் க்ரிஷ் பாட்டி அமைதியாக யோசித்துக் கொண்டே இருக்கிறார்.
முத்து ஏன் யோசிக்கிறீங்க உங்க முடிவை உடனே சொல்லுங்க என்று சொல்ல மீனா அப்படியெல்லாம் சொல்ல முடியாது அவங்க பொறுமையா யோசிச்சு சொல்லட்டும் விடுங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். ரோகினிக்கு போன் போட்ட அம்மா ரோகினி இடம் அவங்க கரெக்டா தான் பேசுறாங்க அவங்க கிருஷ் மேல அக்கறையா இருக்காங்க, அவனுடைய எதிர்காலத்தை பத்தி யோசிக்கிறாங்க என்று சொல்ல, அப்போ நான் அப்படி இல்லையா என்று ரோகினி கோபப்படுகிறார்.
ரோகினியின் அம்மா எடுத்த முடிவு என்ன? ரோகினி என்ன சொல்லப் போகிறார் என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.