மனோஜ்க்கு சந்தேகம் வர, முத்து கலாய்த்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கொசுவலை அடிக்க வந்தவரிடம் முத்து மீனாவின் கோபம் குறைந்ததா என்று கேட்க இல்லை இன்னும் அதிகமாயிடுச்சு என்று சொல்லுகிறார். அதை எப்படி சமாதானம் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று வெள்ளை கொடியுடன் என்று கொடுக்கிறார் முத்து.
மீனா கையில் தொடப்பத்துடன் என்னை பாத்தா பேயாட்டம் ஆடுற மாதிரி இருக்கு என்று கோபமாக கேட்கிறார். ஒரு வழியாக அல்வாவை கொடுத்து மீனாவை சமாதானம் செய்கிறார். பிறகு இருவரும் மாறி மாறி அல்வாவை ஊட்டிக் கொள்கின்றனர்.
மறுபக்கம் ரோகினி பயத்துடன் வீட்டுக்கு வர மனோஜ் எங்கே போனே என்று கேட்கிறார். உள்ள போய் பேசலாம் என்று ரோகினி கூப்பிட உனக்காக தான் கருங்காலி மாலை வாங்க போனேன் என்று சொல்கிறார். ஆனால் மனோஜ் அதனை நம்ப மறுக்க வழக்கம் போல் அழுது டிராமா செய்கிறார். மீண்டும் மனோஜ் அவரை நம்பி விடுகிறார். வித்யாவிற்கு ஃபோன் போட்டு எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம் என்று திட்டி போனை வைத்துவிடுகிறார்.
மீனா அனைவரையும் சாப்பிட கூப்பிட மனோஜ் கருங்காலி மாலையை போட விஜயா சந்தோஷமாக சாமி கும்பிடுகிறார்.
முத்து மனோஜை கலாய்க்க ரோகினி கோபப்படுகிறார். திடீரென வீட்டிற்கு வந்த நான்கு மூட்டை ?அனுப்பியது யார்? இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.