விஜயாவை ஏமாற்ற சுருதி மற்றும் மீனா இருவரும் டிராமா போட, ரோகினி நம்ம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்துவிடம் ஏன் எப்படி சண்டை போட்டு இருக்கீங்க என்று கேட்டு வருத்தப்படுகிறார். பிறகு முத்து இது சண்டை எல்லாம் இல்லப்பா டிராமா என்று சொல்ல அண்ணாமலைக்கு ஒன்றும் புரியவில்லை. முத்து இந்த வீட்டில மீனாவிற்கு அதிகமாக சப்போர்ட் பண்ணுவது யார் என்று கேட்க நீதான் என்று அண்ணாமலை சொல்கிறார் என்னைத் தவிர யாரு என்று கேட்க ஸ்ருதி என்று சொல்ல அது அம்மாவுக்கு பிடிக்கல.
ஸ்ருதியின் அம்மாவை சந்தித்து மீனாவுடன் சேர்ந்து தன்னை மதிக்கவில்லை என்று கொளுத்திப்போட்டு இருக்கிறார்.. அவங்க உடனே மீனா விடம் வந்து சண்டை போட்டு இருக்காங்க. அதனால மீனா கொடுத்த ஐடியா தான் இந்த டிராமா. அப்போதான் அத்தை பெரிய பிரச்சினை பண்ணாம இருப்பாங்க என்று மீனா சொல்லி தான் நாங்க இதை பண்ணோம் என்று சொல்லுகிறார்.
பிறகு ரூமில் சுருதி விஜயா மீது கோபமாக இருக்க, நானே போய் ஆன்ட்டி கிட்ட கேட்கிறேன் என்று சொன்ன நீங்க தான் வேணாம் என்று தடுத்துட்டீங்க என்று ரவியிடம் சொல்லுகிறார் நீ போய் கேட்டேன் நா இன்னும் பெருசா போயிருக்கும் பிரச்சனை வேணாம் விடு என்று சொல்லுகிறார். உங்க அம்மாவும் தான் அதுக்கு காரணம் என்று சொல்ல உடனே ஸ்ருதி அவங்க அம்மாவிற்கு ஃபோன் போட்டு திட்டி விடுகிறார்.
ரோகினி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி இருக்கும் அம்மாவை பார்க்க வருகிறார். அம்மாவை பார்த்து கண்கலங்கி அழ,கிருஷ் எனக்கு பயமா இருக்குமா நீ எங்க கூடயே இரு என்று சொல்லி அழுகிறார்.
ரோகினியின் அம்மாவிற்கு என்ன ஆச்சு? மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்? ரோகினி எடுக்கப் போக முடிவு என்ன என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.