Single Pasanga Song Record in YouTube

சிங்கிள் பசங்க பாடல் படைத்த புதிய சாதனையால் ஹிப்ஹாப் ஆதி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Single Pasanga Song Record in YouTube : தமிழ் சினிமாவின் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஹிப்பாப் ஆதி. பல்வேறு ஆல்பம் பாடலுக்கு இசையமைத்திருக்கும் இவர் ஆம்பள என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று நட்பே துணை. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த சிங்கிள் பசங்க என்ற பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

தற்போது இந்தப் பாடல் வீடியோ யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் ஹிப்ஹாப் ஆதி மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதுபற்றிய தகவலை ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.