நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டு வேதனை பட்டுள்ளார் சித்ரா.
Singer Chithra Daughter Photo : தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பல நூறு பாடல்களைப் பாடி பிரபலமானவர். இவருக்கு திருமணமாகி நந்தனா என்ற பெண்குழந்தையும் பிறந்தது இருந்தது.
எங்கு சென்றாலும் தன் மகளுடன் செல்லும் சித்ரா கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு சென்ற போது தன் மகளை அழைத்துக் கொண்டு தான் சென்றிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது மகள் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இவருக்கு சமீபத்தில் நினைவு நாள் சென்றுள்ளது. இதனால் தன்னுடைய மகளின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டு உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார் சித்ரா.
இதனை பார்த்த ரசிகர்களின் வருத்தம் தெரிவித்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.