வடிவேலு குறித்து அவதூறாக பேசியுள்ளார் சிங்கமுத்து.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. இவரது நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படம் வெளியானது. நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு வடிவேலு இந்த படத்தில் நல்ல ஒரு கம்பேக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் சிங்கமுத்து அவர்கள் சமீபத்தில் வடிவேலு பற்றி அவதூறாக பேசியும் தன்மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் பல விஷயங்களை கூறியிருந்தார்.
இதனால் வடிவேலு அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அதில் சக நடிகரான சிங்கமுத்து 2015 ஆம் ஆண்டு என்னை மோசமாக பேசியதால் அவருடன் நடிப்பதை நிறுத்தி விட்டேன் இருப்பினும் பிப்ரவரி மாதம் தன்னைக் குறித்து அவதூறாக பேசி தன் மீது இருக்கும் நற்பெயரை கலங்கப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் இதற்காக ஐந்து கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.