Singamuthu Reply to Vadivelu Complaint
Singamuthu Reply to Vadivelu Complaint

என் பையனை ஹீரோவா நடிக்கப் போறேன்னு சொன்னதும் வடிவேலு பொறாமைப்பட்டார் என பிரபல நடிகர் கூறியுள்ளார்.

Singamuthu Reply to Vadivelu Complaint : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. ஷங்கருடன் ஆன பிரச்சனையால் இவர் மீது ரெட் கார்டு போடப்பட்டு தற்போது படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.

இப்படியான நிலையில் மனோபாலாவின் யூடியூப் பக்கத்திற்கு நடிகர் சிங்கமுத்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர் வடிவேலுவை பற்றிய பல அதிர்ச்சிகர விஷயங்களை கூறியிருந்தார்.

அன்று விஜய்.. இன்று விஜய் சேதுபதி, மத கலவரத்தை தூண்ட பார்க்கிறார் – போலீசில் அளிக்கப்பட்ட பரபரப்பு புகார்!

நான் நடிகர் சந்தானத்துடன் நடித்ததும் என்னை அழைத்து நம்முடைய நடிப்பு ரகசியத்தை அவனுக்கு சொல்லிக் கொடுக்காதே என வடிவேலு கூறியதாக சிங்கமுத்து கூறினார். மேலும் வடிவேலு பற்றி இன்னும் பல விஷயங்களை கூறியிருந்தார்.

இதனால் வடிவேலு மனோபாலா மற்றும் சிங்கமுத்துவின் மீது போலீசில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாருக்கு தற்போது இன்னொரு பேட்டி ஒன்றில் சிங்கமுத்து பதில் கொடுத்துள்ளார்.

மனோபாலா என்னுடைய வாழ்க்கை வரலாறு பற்றி பேசச் சொன்னார். என்னுடைய வாழ்க்கை வரலாறு என்றால் அதில் நிச்சயம் வடிவேலு இருப்பார் இல்லையா. அதனால்தான் அவரை பற்றி பேசினேன்.

பேட்டி என்று வந்து விட்டால் நம்மை மீறி சில விஷயங்கள் வெளியே வந்துவிடும். நான் பேசுவது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்தால் அவர் எத்தனை பேட்டிகளில் ஷங்கர் மற்றும் சிம்பு தேவன் பற்றி பேசியுள்ளார். அப்போது அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாதா??

அவருடைய டயலாக்கில் சொல்லனும்னா வடிவேலுவுக்கு வந்தா ரத்தம். சங்கர், சிம்புதேவனுக்கு வந்தா தக்காளி சட்னியா? என கேள்வி எழுப்பினார்.

அடுத்த ட்ரீட் ரெடி.. சூரரைப்போற்று படத்தின் சூப்பரான அப்டேட் கொடுத்த சூர்யா – வீடியோவுடன் இதோ!

அவ்வளவு ஏன் என் மகன் ஹீரோவாக நடிக்கப் போகிறான் என நான் வடிவேலுவிடம் சொன்ன உடனேயே அவர் பொறாமை பட்டார். அது அவரின் பேச்சிலேயே தெரிந்தது என மேலும் சில தகவல்களை கூறி சலசலப்பை அதிகப்படுத்தி உள்ளார்.

மேலும் மனோபாலா தற்போதைக்கு சினிமாவில் வடிவேலுக்கு நெருக்கமாக இருக்கும் ஒரே நண்பர் நான் தான். அவரை எப்போது பார்த்தாலும் விரைவில் சினிமாவிற்கு வாங்க என்று கூறிக் கொண்டே இருப்பேன். ஒரு நல்ல நண்பனை பகைத்துக் கொள்ள நான் என்ன முட்டாளா என கூறியுள்ளார்.