ஆனந்தி அன்புவிடம் பேச துடிக்க ஆவேசமாய் கிளம்பியுள்ளார் அன்புவின் அம்மா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று சிங்க பெண்ணே. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஆனந்தி அன்புவின் நண்பனிடம் நான் அன்பு பார்த்து பேசணும் என்று சொல்ல என்ன அதிசயமா இருக்கு முதல்முறையா அன்பு கிட்ட பேசணும்னு சொல்ற என்று கேள்வி கேட்கிறார்.
அன்புவின் அம்மா என் புள்ள எவ்வளவு யோக்கியமானவன்னு நான் அவளுக்கு புரிய வைக்க வேண்டாமா என்று ஆவேசப்படுகிறார்.
அன்புடன் பேச முடியாமல் ஹாஸ்டலுக்கு வந்த ஆனந்தி தனது தோழிகளிடம் அவ்வளவு ஈஸியாக சாரி என்று ஒரு வார்த்தைல சொல்லிட்டா அன்பு பட்ட கஷ்டம் எல்லாம் இல்லாம போயிடுமா என்று கலங்குகிறார் ஆனந்தி.