Sindhubaadh Video Songs out : Vijay Sethupathi | Anjali | Kollywood | Tamilcinema | Latest Cinema News | Kalakkal Cinema | Vivek Prasanna

Sindhubaadh Video Songs out :

இப்படத்தின் வீடியோ பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர் அதில் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் இணைந்து ஆடும் காட்சிகளில் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் மே 16-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு அடுத்த நாளே சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் சிந்துபாத் படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போனது. இதனால் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோனது.

இந்நிலையில் இப்படம் தற்போது ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியை தற்போது படக்குழு தொடங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக இப்படத்தின் வீடியோ பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர் அதில் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் இணைந்து ஆடும் காட்சிகளில் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.