Sindhubaadh Release Date
Sindhubaadh Release Date

Sindhubaadh Release Date – தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மூன்று மாதத்திற்கு ஒரு படத்தை வெளியிடும் அளவு பிஸி நடிகராகவும் உள்ளார்.

அந்தவகையில் 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மட்டும் இவருடைய நடிப்பில் தலா ஆறு படங்கள் வெளியாகியிருந்தன.

இந்த சாதனையை இந்த ஆண்டே விஜய் சேதுபதி முறியடித்து விடுவார் போலிருக்கிறது. ஆம். விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளதாம்.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே டீசர் வெளியாகிவிட்ட நிலையில் படம் மே 16-ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக கடைசி விவசாயி, மாமனிதன், சேரா நரசிம்ம ரெட்டி, சங்கத் தமிழன் என அதிகபட்சமாக இவருடைய நடிப்பில் இந்த ஆண்டு ஏழு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here