Sinam Movie Second Look Poster

கட்டுமஸ்தான உடலமைப்போடு போலீஸ் அதிகாரியாக மிரட்டும் அருண் விஜய்யின் சினம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Sinam Movie Second Look Poster : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். நடிகர் விஜயகுமாரின் மகனான இவர் தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வந்தார்.

அதன் பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் அஜித்துக்கு வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமான நடிகராக தனக்கான இடத்தை பிடித்தார் எனலாம்.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அதன் விஜய் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று சினம்.

குமரவேலன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த போஸ்டரில் அருண்விஜய் நரம்பு புடைக்க கட்டுமஸ்தான உடல் அமைப்பில் இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் விஜய்சேதுபதி சினம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.