Trisha And Simran

Simran And Trisha : பேட்ட திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷாவும் சிம்ரனும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியிருந்த 96 திரைப்படம் இவருக்கு மிக பெரிய பெயரை பெற்று கொடுத்திருந்தது.

96 படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாஷ்பேக் நாயகியாக பேட்ட திரைபடத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. இந்த படத்தில் த்ரிஷாவுடன் சிம்ரனும் இணைந்து நடித்திருந்தார்.

தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு மெகா பட்ஜெட் படத்திற்காக இணைந்துள்ளனர். ஆம் கொரில்லா தயாரித்துள்ள ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. சுமந்த் ராதாகிருஷ்ணன் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார்.

படத்தை பற்றி தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா கூறியதாவது, ரசிகர்களுக்காக எங்களிடம் இன்னும் சில சர்ப்ரைஸ்கள் காத்துக் கொண்டிருக்கின்றன

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படம் ஒரு புதிய முயற்சியாக இருக்கும். படத்தின் படப்பிடிப்புகளை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

அதற்கு முன்னதாக நடிகைகள் இருவரும் கப்பற்படை சார்ந்த பயிற்சியையும் மேற்கொள்ள உள்ளார்கள் என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் சென்னை, கேரளா, பிச்சாவரம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களது தயாரிப்பில் ஜீவா, ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்துள்ள கொரில்லா திரைப்படம் வரும் கோடைகால விடுமுறையில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.